பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 நூலிழை "கவர்ச்சி, அதற்காக அவன் போட்ட ஜாக்கெட் அது' என்று அவரால் உணர முடிகிறது. 'ஜாக்கெட்டு எப்படி இருக்கிறது?' 'அதை வைத்து எதையும் மதிப்பிட முடியாது; பிரித்துப் பார்க்க வேண்டும்' என்று அவர் கூறியது அந்தக் கவிஞனுக்கு உள்ளுறைப் பொருளையும் தந்தது. அவர் அந்தப் பொருளில் உரைத்தவரல்லர். அவர் ரசனை அந்த நிலைக்குத் தாழ வேண்டிய நிலையில் இல்லை. கவிஞனுக்குச் சிலேடை, உள்ளுறை, உருவகம் இவை எல்லாம் அவன் தொழில் உத்திகள். 'ஒளிபடைத்த முகம்' அப்படித்தானே ஒரு கவிஞன் விளங்க வேண்டும்; அவன் முகத்தில் "கிலி படைத்ததது' போல அவருக்குத் தென்பட்டது. 'பசி எடுக்கிறதா' எனக் கேட்டார். 'பசி பாரார்; கண் துஞ்சார்; கருமமே கண்ணாயினார்' அந்த வரிகள் அவனுக்கு நினைவுக்கு வருகின்றன. 'உழைப்பு' என்றான்; 'களைப்பு; அது தென்படுகிறது' என்கிறார். 'பசி அதிகம் எடுப்பது இல்லை' என்று கூறினான். 'இளமைக்கு அழகு பசி எடுத்தல்' என்று அவர் பதில் கூறினார். அதற்கும் அவன் மற்றொரு பொருள் காண்கிறான். அது அவன் பிறவிக் குணம், அவனை மாற்ற முடியாது. இரட்டுற மொழிதல் மருத்துவர் தொழில் அல்ல; நேரே விஷயத்துக்கு வருகிறார். 'உன் முகம் வெளிறி இருக்கிறது' எனத் தெரி வித்தார். சாதனை படைத்தவன்; அவனுக்கு ஒரு சோதனை என்று அறிவிக்கப்படுகிறது.