பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 45 'நான் குடிப்பதில்லை; புகைப்பது இல்லை; கெட்ட பழக்கம் எதுவுமே இல்லை' என்று தனக்குத்தானே நற்சான்று தருகிறான். இதை அவர் கேட்கவே இல்லை. "எப்படிக் கவிதை” இது அவன் வினா. 'ஒட்டம் இல்லை' என்பது சொல்ல வருகிறார். அவன் மனம் புண்படும் என்பது அவர் அறிந்தது. 'இரத்த ஓட்டத்தில் கோளாறு' என்றார். "அழுத்தம்' என நினைக்கிறான். 'இல்லை; மற்றும் ஒரு தேர்வு உள்ளது; எதையும் திரையிட்டுத்தான் பார்க்க வேண்டும்' என்கிறார். அவன் கற்பனை எங்கோ பறக்கிறது. அவன் ஒரு திரைக் கவிஞானாகிறான். திரை என்ற சொல் அவனைத் தட்டி எழுப்புகிறது. 'அறிகுறிகள் இருக்கின்றன’’ முன்னுக்கு வருவான் என்பது அல்ல; முதலுக்கே மோசம் என்று அறிவிக்கப்படுகிறது. அவன் கவிதைகள் திரையிடப்படவில்லை; அவன் திரை முன் நிறுத்தப்பட்டான், ஸ்கிரீனிங்கில் கான்சர்' என்கிறார். 'புரையோடிப் போய் விட்டது. அதைத் திருத்த முடியாது” என்று அவன் திரை உலக விமர்சனம் செய்கிறான். 'திருத்த முடியும்; கவலைப்படாதே' என்று ஆறுதல் கூறினார். அவனுக்கு விளங்கவில்லை. 'உனக்கு வயிற்றில் கான்சர், அதற்கு அறுவை சிகிச்சை தேவை என்று தெளிவுபடுத்துகிறார். -