பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நூலிழை அவன் மனத்தில் பல அறிஞர்கள்; ஞானிகள் வந்து நிற்கின்றனர். 'இது அறிஞர்களைத் தாக்கும் வியாதி. தன்னையும் இது அங்கீகரித்து விட்டது' என்று மதித்துக் கொள்கிறான். பரமஹம்சர், ரமண மகரிஷி, அறிஞர் அண்ணா இப்பெருமக்கள் அவனை அச்சுறுத்தினார்கள். அவன் பார்த்த டி.வி. படம் அவனுக்கு ஆறுதல் தருகிறது; 'மோனிகா அந்தப் பெண் பாத்திரம் அவள் தரும் நம்பிக்கை கோபாலைக் குணப்படுத்தி விடுகிறது. காதல் கான்சரைக் குணப்படுத்தி விடுகிறது. அவளுக்கும் கான்சர். அவனுக்கும் அதே நோய். அதனால் ஒருவர்மீது மற்றவர் காட்டும் அன்பு காதலாக மாறுகிறது. கதை புதுமைதான். நம்பிக்கை, கான்சரைக் குணப்படுத்தி விடுகிறது. அந்த நம்பிக்கை இவனுக்கும் தேவைப்பட்டது. அதை அவன் தேடுகிறான். அவனுக்கு ஒரு 'மோனிகா எங்கே கிடைக்கப் போகிறாள். அப்படிக் கிடைத்தால் அந்த நோயை அவன் விரும்பி ஏற்று இருப்பான். மருத்துவர் தான் அந்த நம்பிக்கையைத் தர வேண்டியிருந்தது. 'ஐயா நம்பிக்கை இந்த நோயைக் குணப் படுத்துமா?’ என்று கேட்கிறான். 'நம்பிக்கை எதற்கும் தேவை. பிழைப்போம் என்ற நம்பிக்கை; அது சிகிச்சையை ஏற்கத் துணை செய்யும்; உறுதியான நெஞ்சு இது எந்த நோயாளிக்கும் தேவை; அது அந்தக் கதாநாயகனுக்குக் கிடைத்தது; பொறுமை அவனுக்கு உதவியது” என்று விளக்கம் தந்தார். 'மருத்துவம்தான் அவனைக் குணப்படுத்தியது: அதை அவர்கள் காட்டவில்லை' என்று தன் விமரி சனத்தை வெளியிட்டார்.