பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சுமை குறையாது அவர்கள் முகம் வெள்ளைத் துணிகளால் மூடப்பட்டு விட்டன. அவர்களைப் பார்க்கவும் தகுதி இல்லை என்பது போல் இச்செய்கை இருந்தது. அவர்கள் இனி எழப்போவது இல்லை; குழி ஒன்று தேவைப்படுகிறது. குழிகள் பல தேவைப்படு கின்றன. அவற்றில் அவர்கள் குடித்த அந்தக் குடல் அழுகப் போகிறது. இனி அவர்கள் விஷச் சாராயம் குடிக்கப் போவது இல்லை; மறுபடியும் இந்த அழுகை அவர்களுக்காக ஒலிக்கப் போவது இல்லை. வீரமரணம் அடைந்தவர்களுக்கு வெள்ளை மாளி கைகள் கட்டுகிறார்கள்; அது நினைவுச் சின்னம். அவர்கள் மரணத்தை விரும்பித் தழுவுகிறார்கள். களத்தில் சென்றவர்கள் போராடுகிறார்கள். எதிரிகள் சுட்டார்கள். இவர்கள் இறந்து பட்டார்கள். இவர்களுக்காக வெள்ளை மாளிகை எழுப்பப்பட்டது. இந்தச் சாராய வீரர்களுக்கு எந்த நினைவுச் சின்னம் எழுப்புவது? பெரிய கோப்பை' ஒன்று செய்து அதன் வெளிமுகட்டில் கண்ணதாசன் பாடல்ை வரியைத்தான் எழுத வேண்டும் 'இது என் குடியிருப்பு' என்றுதான் எழுத வேண்டும். இதைப்பற்றி இவர் தன் நண்பருக்குத் தொலைபேசியில் பேசுகிறார். இந்த வருத்தம் நண்பரைத் தாக்கவில்லை. அவருக்கு ஒரு அதிர்ச்சி, அதிலிருந்து அவரால் மீள இயலவில்லை. இவர் சொல்வதை அவர் கேட்கும் நிலையில் இல்லை. "கொஞ்ச நாளைக்கு என்னிடம் பேசா திருங்கள்; என் மனநிலை சரி இல்லை' என்றார். அப்படி இல்லை; ஏதோ அவர் நேசித்த ஒருவர் மறைந்து விட்டிருக்க வேண்டும்.