பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 53 அவரது மனைவி உடல் நலம் சரியாக இல்லை என்று சொல்லி இருந்தார். அந்த அம்மையார் இந்த நண்பர் செல்லும்போது எல்லாம் 'புரு காபி போட்டுத் தருவார்கள். அவர் மறைந் தது உண்மையில் அதிர்ச்சிதான். யார் இனி புரு' போட்டுத் தருவார்கள். அந்த வீட்டுக்குச் சென்றால் யார் வரவேற்பார்கள். நண்பருக்கு ஆறுதல் கூறுவது என்று தீர்மானிக் கிறார். இரங்கற்பா ஒன்று பாடுவது; அச்சிடுவது; அதன்கீழ் தன் பெயர் போட்டுக் கொடுப்பது என்று முடிவு செய்கிறார். ஆசிரியப்பாவால்தான் எழுத முடியும். அந்த அம்மையார் நற்குண நற்செயல்களை எல்லாம் சேகரித்துக் குறிப்பு எடுத்து வைக்கிறார். மிகுதியாக எழுத வாய்ப்பு இல்லாததால் நாட்டு வளம் நகர்வளம் சேர்த்துச் சீர்மிகு” என்று தொடங்குவது என்று தொடங்கினார். 'வனிதாமணி என்ற ஒரு சொல் அதுதான் பொருத்த மானது என்று முடிவு செய்கிறார். அவர்கள் பெயர் 'லலிதா அதனால் எதுகை நயம் தோன்ற இந்தச் சொல்லை நுழைப்பது என்ற முடிவு ஆகிறது. அந்த வனிதாமணி என்ற சொல்லைப் புகுத்தி விட்டால் பல சொற்கள் 'மணி என்று முடிந்தால் நன்றாக இருக்கும்; பல சொற்கள் தேடினார். 'பொன்மணி என்ற சொல் முதலில் வந்து விழுந்தது; அது எப்படி வந்தது அவருக்கே தெரியவில்லை. 'வெண்மணி என்பது அடுத்த சொல் அவருக்குக் கிடைத்தது. இது ஏதோ ஒரு கதையின் களம் என்பது நினைத்துப் பார்க்க முடிந்தது. 'கண்மணி என்று சொன் னால் மிகவும் பொருத்தமாய் இருக்கும் என்று முடிவு