பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 விழிப்பு இந்தத் தொழிலில் அந்த நாட்களில் யாரும் முன்னுக்கு வந்தது இல்லை. இந்த அப்பாவி மனிதர் தப்பான தொழி லில் கால் வைத்திருப்பதால் உதவி செய்ய வேண்டும்' என்று அவருக்கு ஏற்பட்ட உந்துதல் இருவரையும் பிணைத்தது. காசு கொடுத்தால் எதனையும் சாதிக்க முடியும் என்று சொன்னார்கள். அப்படிக் காசு கேட்காமல் ஓர் உதவி செய்தார் என்றால் அந்த அபூர்வ மனிதரை இவரால் எப்படி மறக்க முடியும்?. இன்று இவர் அச்சுத் தொழிலை அழகாக நடத்து கிறார் என்றால் அந்த நட்பு இவரை நச்சிக் கிடைத்ததால் தான்; மச்சு வீடு ஒன்று கட்டவும் முடிந்தது. அந்த வழுக்கைத்தலை அவ்வளவு சீக்கிரம் சாயும் என்று யார் எதிர்பார்த்தார்கள்? அது சாய்ந்துவிட்டது; அதற்கு ஒரு முண்டாசு கட்டி அதை மறைத்து எடுத்துச் சென்றார்கள். செத்த பிறகு அவர் செல்லும் சிவலோக யாத்திரைக்கு உடன் துணைபோக முடியாது; இடு காட்டுக்கு அன்று இவர் பாதயாத்திரை செய்து அவருக்கு நெருப்பிட்டு எரியவிடும் தொடக்கம் வரை நின்று இறுதி மரியாதை செய்தார். அதுதான் அவருக்கு இவர் செய்யக் &n-to-u 1351. அந்தக் குடும்பம் துரதிருஷ்டமான குடும்பம். இவர் ஒரு ரயில் பஸ் மோதல் விபத்தில் செத்து இருந்தால் ஐம்பதினாயிரம் கிடைத்திருக்கும். மாபெரும் தலைவர் மந்திரியாகவில்லை என்று சொல்லி எரியிட்டுக் கொளுத் திக் கொண்டிருந்தால் பத்து லட்சம் கிடைத்திருக்கும். 'தியாகம்’ என்ற முத்திரை குத்திக் கொண்டிருந்தால் அந்தக் குடும்பத்துக்கு அவர் செய்த யாகமாக இருந்திருக்கும். நோய் வாய்ப்பட்டு மரணம் அடைந்தார். அவ்வாறு மரணம் அடைந்து இருக்ககக் கூடாது என்பது பலர் கருத்து.