பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கிளிஞ்சல்கள்

59



இன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். உழவு செய்பவன் பட்டினியால் சாகிறான். பச்சைச் செடிகள் பசுமழை இல்லை என்றால் அவை வாடிவிடுகின்றன. மண்ணை நம்பி வாழ்ந்தவர்கள் இவர் கள்; வானம் பொய்த்துவிட்டது. இவர்கள் வாக்குச் சாவடிகள்; காவடி எடுத்தால் யார் தரிசனம் தருகிறார்கள். இப்படியும் நாடகம் நடத்தப்பட்டது. சாகட்டும்! பிறந்தவர் கள் ஒரு நாளைக்கு இறக்கத்தானே ஆகவேண்டும் அவர் கள் சவ மாதிக்கு எம் மலர்மாலைகள்! வாழ்க விவசாயிகள்.

இது பத்திரிகைச் செய்தி, இவர்களுக்கு நாம் ஆறுதல் கூற முடியாது அதற்கு என்று ஆளும் வர்க்கத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் அறிக்கைகள் தருவார்கள்; என்ன தரப்படும்? இரக்கம் காட்டப்படும்; வருந்துகிறார்கள் என்று அறிவிப்பார்கள்; அறிவிக்கட்டும்; வாயில்லாப் பூச்சிகள் அவர்கள் கொடி பிடித்துக் கோட்டைகள் நோக்கி ஊர் வலம் செல்லவில்லை வாழ்க்கையைக் கோட்டை விட்ட வர்கள்; நிச்சயம் ஒரு புரட்சி; கிளம்பத்தான் போகிறது; அவர்கள் சாகமாட்டார்கள். சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். இவர் நன்றி மறக்கவில்லை; அன்று விண்ணப்பம் பூர்த்தி செய்ய உதவியவர் அதை மறக்க முடியாது.

ஆறுதல் கூற அந்த இல்லாம் செல்ல நேர்கிறது; அந்த வீட்டு முன் அறையில் ஊதுவர்த்தி புகையை மறைந்த மாணிக்கம் நுகர்ந்து கொண்டு தலைப்பாகை யோடு கம்பீரமாகக் காட்சி அளித்தார். வழுக்கைத் தலை அவருக்கு இல்லை; அதனால் எழுந்த இழுக்கு அதைப் பற்றி யாரும் நினைத்ததும் இல்லை; அவரும் இனித் தலையைத் தொட்டுப் பார்க்க இயலாது.

எப்படி ஆறுதல் கூறுவது? அவர்கள் யவ்வனம் அவர்களை விட்டு அகலவில்லை; அவர் மட்டும் அவர்களை விட்டு அகன்றுவிட்டார்.