பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

விழிப்பு



ஏன் இவர்கள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற வினா எழுந்தது.

இந்தப் படத்தை வைத்து எத்தனை நாளைக்குப் பூஜை செய்ய முடியும்? ஊதுவர்த்தி எரிந்து கொண்டுதான் இருக்க வேண்டுமா? அவர் நெற்றியில் குங்குமப் பொட்டு கண்ணாடிக்கு வெளியே இடப்பட்டிருந்தது. அது அழிய வில்லை; இந்த அம்மையார் இவர்கள் மட்டும் அழித்துக் கொண்டார்கள். வளையல்கள் நீங்கிவிட்டன. முழங்கை மட்டும் வெளியே பளிச்சிட்டிருந்தது; முகத்தில் அமைதி: கலகலப்பு இல்லை; என்றாலும் இளமை தனித்துவத்தைத் தந்து கொண்டிருந்தது.

பிஞ்சுச் செடி ஒன்று பக்கத்தில் துளிர்விட்டுக் கொண்டிருந்தது. அது அவன் செய்த வினை; அவளுக்கு ஒரு லட்சியத்தை விட்டுச் சென்றிருக்கிறான். இந்தப் பசும் பயிர்தான்; அதற்காக அவள் கண்ணிர் விடவேண்டி யிருந்தது. அதனைக் கண்ணிர் விட்டுக் கொண்டே வளர்க்க நேர்ந்தது.

இவர் வீடு கட்டக் கல் கேட்டு இருந்தார்; அந்த மனுஷன் மனைவி திடீர் என்று காலை நீட்டி விட்டாள்; விறைத்துக் கொண்டாள். முன்பணம் கேட்காமல் கல் சப்ளை செய்தவர். யார் நம்பி இப்படித் தருகிறார்கள். இப்பொழுது 'கல்' டிமாண்டு இல்லை. பணச் சந்தை இறக்கம் என்று சொல்கிறார்; வீடு கட்டுவது நின்று விட்டது. என்று பேசுகிறார்கள் 'போக்ரான் வெடி' எத்தனையே நெடிகளைத் தோற்றுவித்தது என்று பேசுகிறார்கள். இன்று தொழில்கள் நசிந்து விடுகின்றன என்று பேசுகிறார். அவர் மனைவி சாவுக்குச் செல்லவில்லை. மறைவு அதனால் ஏற்பட்ட துக்கத்தை மாற்றுவது ஒரு சமூகக் கடமை; ஏதாவது ஆறுதல் கூற வேண்டி இருக்கிறது.

என்ன கூறுவது? என்ன செய்வது? "கொடுத்து வைத்தது அவ்வளவுதான்; இருக்கிறதை வைத்து வாழ