பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளிஞ்சல்கள்

67



அவனே தொடர்ந்து பேசுகிறான். "கந்தசாமி, அவன் நூறு தானே வாங்கினான்; அவனுக்கு எப்படி இடம் கிடைத்தது? எல்லாம் சும்மா சொல்கிறார்கள் சார். காசு வாங்கிக் கிட்டு இடம் தருகிறார்கள்".

"இல்லேப்பா? முதல்வர் அப்படிப்பட்டவர் அல்ல; காசு அவர் கையில் தொட மாட்டார்; எனக்குத் தெரியும்"

"அதுக்கு ஏன் அந்தப் பதவிக்கு வர வேண்டும்?" என்று அனுபவம்மிக்க மொழியில் பேசுகிறான்.

"முதல்வர்கள் தவறு செய்வது இல்லை. நிர்வாகிகள் தான் தவறு செய்கிறார்கள். அவர்கள் இவர் தவறு செய் யாமல் கண்காணிக்கிறார்கள். அந்த இடத்தை அவர்கள் இழக்கத் தயாராக இல்லை. இதுதான் உண்மை.”

"பிறகு வழி?”

இவர் 'மாஜி' அவ்வளவுதான். செல்வாக்கு இல்லாத ஒரு தொழில் இருக்கிறது என்றால் இதுதான்; ஆசிரியத் தொழில்தான் என்பதை அவரால் உணர்ந்து அடங்கி இருக்க நேர்கிறது.

"சார் நன்றி! இடம் கிடைத்து விட்டது”

"பெருமகிழ்ச்சி; என் வாழ்த்துக்கள். நான் சொல்லலே என் நண்பர் அவருக்குச் செல்வாக்கு இருக்கிறது; அவர் சொன்னால் முதல்வர் கேட்பார். என் பேரைச் சொல்லி இருப்பார். அதனால் கட்டாயம் தருவார். தந்திருக்கிறார்" என்று இவர் தன் பெருமிதத்தை வெளிப் படுத்துகிறார்.

"இல்லை சார்! தனியார் நிறுவனம்; அதில் ஐம்பதாயிரம் நன்கொடை தந்தேன்; கிடைத்து விட்டது. சுலபம்; கவலையே இல்லை" என்று அவன் தன் சாதனையைத் தெரிவிக்கிறான்.

அவர் வெட்கப்பட்டார்; எதற்கு? இந்நாட்டின் சீர்கேட்டை நினைத்து. அதில் வேதனையும் கலந்திருந்தது.