பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வைர மோதிரம் 1 () வைர மோதிரம் அவர் எதிர்பார்க்கவில்லை; காலமெல்லாம் தமக்குத் துணை என்று நினைத்த 'கால்கட்டு இறுதியில் 'கால் கட்டோடு தன்னை விட்டு நீங்கும் என்று எதிர்பார்க்க வில்லை. மறைந்த அந்த மாணிக்கத்தின் கனவு எல்லாம் பூவும் பொட்டோடும் பயணம் செய்ய வேண்டும் என்பது. மற்றவர்கள் கூறினார்கள். "அவள் கொடுத்து வைத்தவள் முன்னால் போய்விட்டாள்' என்று பேசினார் ᎼᏏ©YᎵ . எதற்காக இப்படிப் பேசுகிறார்கள் என்பது அவருக்கு விளங்கவில்லை. பின்னால் இருந்து சிறுமை படுவதைவிட இது பெருமை என்று நினைக்கிறார்களா? சுயநலமா? பாரத கலாச்சாரம் இப்படி அவர்களைப் பேச வைக்கிறது என்று முடிவு செய்கிறார். அடுத்தது 'சம்சாரம் ஒரு மின்சாரம்'; எங்கே சென்' றாலும் அதிர்ச்சிதான். . . பெண் அதாவது தன் மகள்; அவள்தான் ஆறுதல் என்று நினைக்கிறார். மருமகள் அந்நியம் என்று கால மெல்லாம் பேசப்பட்டு வருகிறது. அதை அவர் நம்புகிறார். - நிழல் தேவைப்படுகிறது. எந்த மரத்தில் சாய்வது? என் முதியோர் இல்லத்தில் வதிதல் செய்யக் கூடாது என்று