பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 69 நினைக்கிறார். வசதி இருக்கிறது. உண்பது உறங்குவது அல்லால் வேறு என்ன இருக்கிறது. அந்த நிலைதானே தன் நிலை? எண்ணிப் பார்க்கிறார். எந்த இல்லம் சுகவாசம் என்று எண்ணிப் பார்க்கிறார். அங்குள்ள சகவாசம் அதையும் அளவிட்டுப் பார்க்கிறார். 'பழங்கதைகள் பேசுவதில் ஒர் மகிமை இல்லை' என்ற வரிகள் எதிர் ஒலிக்கின்றன. அங்கே அவலம் அதுதான் நிழலாடும். வேறு என்ன பார்க்க முடியும். சிரித்த முகம்; அதுதானே வாழ்க்கையின் உற்சாகம். யாராவது சிரிப்பார்களா? நோயைத் தவிர வேறு என்ன அங்குக் காண முடியும்? அவலம், கவலை, கையாறு, அழுங்கல் இவை தாமே அங்கு எதிர் ஒலிக்கும், 'அந்த அம்மா போய்விட்டது எங்களால் நம்பவே முடியவில்லை' என்று ஆறுதல் சொல்ல வந்தவர் சிலர். ஏன் இவர்களுக்கு இந்த அவநம்பிக்கை? அவர்கள் தாம் போய்விட்டார்கள் அச்சடித்த அறிவிப்பு அதில் மூலையில் சிறிது கருப்பு உத்தரகிரியை என்று தலைப்பு; வேறு என்ன சான்று கேட்கிறது? இவராலேயே நம்பமுடியவில்லை. ஆம் தன்னோடு வாழ்வது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது. சந்தியில் விட்டுச் சென்றுவிட்டாள். எந்தப் பக்கம் போவது? மகள்தான் தன் வயிற்றில் பிறந்தவள்; மாப்பிள்ளை; அவன் கடந்த காலச் சுரண்டல்கள் நினைவுக்கு வரு கின்றன. வைர மோதிரம் வாங்கித் தந்தால்தான் வயிறு நிரப்புவேன் என்று அடம் பிடித்தவன். அன்று இவரால் வாங்கித் தரமுடியவில்லை. எந்த முகம் கொண்டு அங்குப் போவது?