பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 எப்படி முடிப்பது அவன் பேச்சு எங்கெங்கோ தாவுகிறது. ‘'நீ வக்கிரங்களை எழுதுவதில் இப்பத்திரிகை ரிப்போர்ட்டர்களை விஞ்ச முடியாது. ஏதாவது நல்ல கதை எழுது' என்று அறிவுரை கூறுகிறார். 'ஒரு கிராமத்துப் பெண்’ என்று ஆரம்பிக்கிறான். "அவள் நகரில் கல்லூரியில் சேருகிறாள். மகளிர் விடுதியில் அவளுக்கு இடம் கிடைக்கிறது. அடுத்து இப் படித்தானே எழுதப் போகிறாய்?' மேலும் தொடர்கிறார். 'இப்படித்தானே எழுத்துத் தொடங்குகிறது. இது பார்முலா; சரி! அப்புறம் என்ன செய்யப் போகிறாய்?' 'அவள் கெட்ட சகவாசம் அதில் அகப்பட்டுக் கொள்கிறாள். போதை மருந்துக்கு அடிமையாகிறாள்'. 'இது சினிமாகப் பாணி, அப்புறம் அவள் மீட்கப்படுகிறாள். அல்லது திருந்துகிறாள். பிறகு அவள் அமைச்சர் மகன் மீது வழக்குத் தொடுக்கிறாள். அவனை உள்ளே தள்ளும் வரை அவள் உறங்கவே இல்லை?” 'இது எப்படி உங்களுக்குத் தெரியு?” 'டி.வி. படம் பார்க்கிறது இல்லையா?” 'பார்த்தால் என் ஒரிஜினாலிட்டி கெட்டுவிடும்; அதனால் பார்ப்பது இல்லை” 'நல்லதுதான் பார்த்தால் இன்னும் உன் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்'. "அவர்கள் அவளைப் போதை மருந்துவரை கொண்டு சென்றிருக்கிறார்கள். நீ அவளை மற்றவர்கள் கெடுத்து விட்டார்கள் என்றே எழுதலாம். பார்க்காமல் இருந்ததே நல்லது' என்று பதில் தருகிறார். 'நமக்குக் கதைகள், டி.வி, சினிமா, பத்திரிகை ரிப் போர்ட் இவைதானே இன்ஸ்பிரேஷன்' என்று ஆங்கிலத் தில் வெளிப்படுத்தினான்.