பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நன்கொடை 'என் பெண்ணுக்குக் கலியாணம் ஆகணும்' 'எனக்கு என் மனைவி இருக்கிறாள். தேவை இல்லை' என்று பதில் சொல்கிறார். 'உங்களுக்குத் தேவை இல்லை; அவளுக்குத் தேவை இருக்கிறது'என்று அடுக்குகிறாள். 'மணமகன் தேவை என்று விளம்பரம் இட்டால் ஒரு மடமகன் கட்டாயம் வருவான்' என்று அறிவுரை தருகிறார். 'பொருள் உதவி' என்கிறாள். 'தமிழ் அரசு எல்லா அரசும் அது என்றும் இதில் அக்கரை காட்டுகிறது. அவர்கள் உதவி தருவார்கள்'. "கட்டியவர்கள் மணமானவர்கள் பிள்ளைகளை மறைத்து வைத்து விட்டுத் தாலி ஏற்கிறார்கள்!. இதுதான் நடக்கிறது' என்கிறாள். அவளுக்கும் ரசனை இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. 'நான் மணத்தை ஆதரிப்பதில்லை' என்று சொல்லி அவர்களை அனுப்பி வைக்கிறார். 'இவன் பிரம்மசாரியாக இருந்தவன். இப்பொழுது சம்சாரியானவன். அனுபவத்தின் அடிப்படையில் அந்த உபதேசம் சொல்கிறான்' என்பதைக் கூறி அவர்கள் தங்களுக்குள் விமரிசித்து விலகுகிறர்கள். காவி வேட்டி, சந்தன பொட்டு; அது ரேஷன் அளவை மீறுகிறது. பொட்டு அல்ல; அது நெற்றியில் ஒரு திட்டு ஆகிறது. அந்த அளவுக்கு இதற்காகவே அவர் திருநீர் ஸ்நானம் செய்திருக்கிறர் என்று தெரிகிறது. ஞானஸ்நானம் பெற்றவர் போல் காட்சி தருகிறார். சாம்பலில் புரண்டு எழுந்தவர் போல் காட்சி தருகிறார். 'முருகன் கோவில் கட்ட வேண்டும்'