பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 . கடைசி வரை 'தமிழ் ஐயா என்று அழைக்கலாம் போலத் தோன்று கிறது. அவர் என்ன சாதி? என்ன மொழி இதைப் பற்றி நினைப்பது நாகரிகம் அல்ல; தமிழ் பேசுவது சிறப்பாக இருந்தது; அவ்வளவுதான். - வள்ளுவர் முதல் வள்ளலார் வரை அவர் பாடல் களை ஒப்புவிப்பார். இது வெறுமையின் வெளிப்பாடு என்பதை இவனால் அறிந்து கொள்ள முடிந்தது. ஏதாவது மனத்துக்கு வேண்டும். அதுதான் இவர்களை இப்படி மனப்பாடம் பண்ண வைக்கிறது. மற்றவர்களிடமும் ஒப்புவிக்கிறார்கள், வியக்கவும் வைக்கிறார்கள். ஒவ் வொரு கருத்துக்கும் ஒரு பழம் பாடல் அவருக்கு சாட்சியாக வந்து நின்றது. அவருக்கு மணி விழா என்று அறிவிக்கப்பட்டது; இது கொச்சைப்படுத்தி, 'அறுபதாம் கலியாணம்' என்று சொல்லியது இவனுக்குக் கேட்கப் பிடிக்காமல் இருந்தது. அயோத்தி மன்னன் பண்ணிக் கொண்டது அறு பதினாயிரம் கலியாணம்; பாவம் பரிதாபத்துக்குரியவன். இந்த இளைஞனும் அழைப்பிதழ் தரப்பட்டதால் அம் மணி விழாவில் பங்கு ஏற்றான். ஏதோ அவருக்குத் தரவேண்டும் என்று நினைத்தான். 'திருவாசகம் அவர் அடிக்கடி ஒப்புவித்தார். அது நெஞ்சை உருக்கும் நூலாக இருந்தது. தன்னைப் பற்றியே ஆராய்ந்து கொண்டு உலகத்தைப் பார்க்க மறுத்த நூல். இந்த வயதானவர்களுக்கு அது ஒரு பாதுகாப்பு. அது அவர் விரும்பிய நூல்; அதனை அவருக்கு மரியாதைக் காகத் தந்து அவர் பொன்னடியில் விழுந்து வணங்கி பாரத கலாச்சாரம் இது என்பதைக் காட்டினான். அவனுக்கு அது அரசியல் கலாச்சாரமாக மாறும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.