பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 83 இந்த இணைப்பு நீடித்து இருப்பதை அவனால் கவனிக்க முடிந்தது. ஆண்டுகள் ஐந்து கடந்தன; அவர் மட்டும் தனியே செல்வது நூலகம்; தமிழ்ப் பற்று உடையவர்; அதனாலேயே கூடும் சில கூட்டங்கள்; இவருக்குத் தமிழ் பேசுவது கேட்பது ஒரு பொழுது போக்கு. இங்கே இவர் போவது தனிமையில்தான். ஜோடிப் புறாக்களைக் கண்டது இல்லை. இணைப்பில் ஒரு விரிசில் அவனால் காண முடிகிறது. வள்ளுவரும் வள்ளலாரும் அவரை விட்டு அகன்று விட்டனர். 'திருவாசகம் அவர் கையில் எப்பொழுதும் பிரிக்கப்பட்டு அவர் கைரேகைகள் படிந்தன. நான் யார்? என் உள்ளம் யார்?' என்று கேட்டுக் கொண்டிருந்தார். அது அந் நூலில் வரும் வரிகள் என்பது தெரிந்தன. ஊன், உயிர், உள்ளம் இந்த மாதிரி பேசத் தொடங் கினார். அது அந்நூலின் தாக்கம் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. - அந்த அம்மையாரை அவர் இல்லாத நேரத்தில் அவர்களைச் சந்திக்க நேர்கிறது. 'பெரியவர் அவர்?' "அவருக்கு என்ன வேலை. சதா திண்ணையில் துங்குவார்; இல்லை என்றல் சொற்பொழிவுகள்.’’ என்று சலிப்பாகத் தெரிவித்தார். தமிழ் அழகாகப் பேசுகிறார்; அவரைத் தாழ்வாகப் பேசுவதை இந்த இளைஞனால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. 'பூவும் பொட்டும்’ என்ற பேச்சு வந்தது.