பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 85 அவர்பால் பரிவும் பாசமும் கொண்டு அவர் தொழில் செய்த காலங்களில் ஒதுங்கி இருந்து தொந்தரவு செய்யாத நோய்கள் முற்றிய அவர் வயதில் அவரை வந்து முற்றுகை இடுகின்றன. நாளடைவில் பழகிய தோஷத்தால் அவனை விட்டுப் பிரியாத தோழனாக உறவு கொண்டன. சில நோய்கள் இதயத்தையும் தொட்டன; அவரு டைய பணி, தொழில் ஈடுபாடு எல்லாம் ஆன்மீகம்தான். அதைப் பற்றிப் பிறரிடம் உளறிக் கொண்டிருப்பார். அவற்றைப் பற்றிய விவாத வாய்ப்புகள் அவரை விட்டு நீங்குகின்றன. அவர் படித்து வந்த வாசகங்கள் அவர் மனச் சுமைக்கு மாத்திரைகளாக இருந்தன. "கடைசி வரை யாரோ' என்ற கதறல் அவரைத் தன்னை ஒரு வேதாந்தி யாகக் காட்டியது. ஏன் அந்தக் கதறல்? மக்களை மடமை யாக்குகிறது. இதை அவர் புரிந்து கொள்ளவில்லை. நோய் முத்திரை சில சமயம் மருத்துவமனையில் அவரை நித்திரை கொள்ளவும் செய்தன. வெறுத்து விமர்சித்த அந்தப் பத்திரிகை விமரிசகர் அவரை அறுத்துக் கொண்டு அகலவில்லை; அவர்கள் அந்த மருத்துவ அறையில் தங்கி இருக்க அனுமதி பெற்று உடன் இருப்பு என இருந்தார். அங்கே இருந்த நாட்களில் அவர் (அந்த அம்மை யார்) பாதி மருத்துவர் என்று சொல்லப்பட்டது. நோய் நாடி அவற்றின் குணம் நாடி அங்கு இருக்கும் கருவிகள் இவற்றின் பெயர்கள் அறிந்து வைத்துச் சர்க்கரை, கொழுப்பு, புளிப்பு இந்தச் சுவைகள் கேட்டவுடன் சொல் லும் புலமை பெற்றிருந்தார். 'பி.பி' இதுதான்; அவ்வப் போது தெரிந்து வைத்து வந்தவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.