பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கடைசி வரை இதயம் இடதுபுறம் உள்ளது; அவர் தன் இதயத் தைப் பறிகொடுக்காமல் இருக்கச் சகல மருத்துவமும் செய்யப்பட்டன. நாளங்களை மாற்றுவதாகக் கேள்வி. தனயார் மருத்துமனை, அதனால் காத்திருந்துதான் உள்ளே நுழைய முடிந்தது. 'டிப்ஸ் கொடுத்தால் அதை அவன் வாங்கிக் கொண்டான். ஆனால் அவன் உள்ளே விட்டது நான்கு மணி ஆன பிறகுதான். அந்தத் தாம்பத்தியம்; இருவர்தம் உறவு எதுவரை அதை அறிய அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. அந்தப் படுக்கை அறையை அவர் இவ்வளவு அசிங்கப்படுத்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவசரம்தான்; அதனால் நர்சுகள் விழுந்து அடித்துக் கொண்டா வரமுடியும். நேரத்தின் முள் அதன் இயக்கத் தில்தான் அசையும். அது தன் கடமையைச் செய்கிறது. இவர்கள் அதை அறிந்து வருவதற்குள் ஒரு ஜீவன் அங்கு இயங்கி அவரைத் தாங்கி அவரை மனிதராக மாற்றி வைக்கிறது. அந்த நர்சுகள் பிரமையோடு அந்தப் பிரமன் படைப்பைப் பார்க்கிறார்கள். எப்படி ஒரு நோயாளியைக் கவனிக்க வேண்டும் என்பதை அவர்கள் முழுவதும் அறிய முடிகிறது; இது தொழில் அல்ல; சேவை என்பதை அறிகிறார்கள்; அறிய வைக்கப்படுகிறார்கள். அங்கு ஒரு இயந்திரத்தை அவர்கள் காணவில்லை. ஒரு ஜீவன்; அதன் இயக்கத்தைக் காண முடிந்தது. உடல் அல்ல அது; உயிரின் இயக்கம் என்பதை அறிகிறார்கள். உயிர் ஒன்று மற்றொரு உயிரைத் தேடிச் சென்று அதனோடு இணைந்து ஒன்றாக இயங்குவது போல இவனுக்கு (இந்த ஆய்வாளனுக்குத்) தெரிகிறது.