பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 87 ஈருடல் ஒர் உயிர் என்பது கவிதை அல்ல; உண்மை என்பதை அவனால் நேரில் காண முடிகிறது. கண் விழித்துப் பார்க்கும் நேரத்தை இவன் கண் விழித்துப் பார்த்துக் கொண்டு காத்து இருக்கிறான்; வாய் அசைகிறது; சொற்கள் ஒலி பெற்று வெளி வருகின்றன. இந்த அன்பன் அவனுக்குச் சாத்திரங்கள் பேசிய வாய்; வள்ளுவர் குறளை ஒப்புவித்த ஓசை, வள்ளலார் பாடல் சிறப்பாகப் பாடிய நாதம்; திருவாசகம்; சில கருத்துக்களை வெளியிட்டன. 'நான் இந்த மண்ணுக்குச் சுமை; பூமிக்கும் பாரம்; நோய்கள் என்னை வாழ விடாது; மறுபடியும் உங்களிடம் எந்தத் தத்துவங்களையும் பேச மாட்டேன்; பேச வாய்ப்பு இருக்காது; இனி இது நான் சொல்வது : "கடைசி வரை யாரோ என்ற கதறல் அர்த்தமற்றது: நேசிக்கும் நண்பன் நீ; சுவாசிக்கும் இறுதி மூச்சு கரம் பிடித்த காரிகை இவள். இந்த உண்மையைச் சொல்லு கிறேன்; எழுதி வைத்துக் கொள்' என்றார். - அவர் மூடிய கண்களை அவரால் திறக்க முடியாமல் போயின; அவர் தேடிய தத்துவம் மட்டும் இவன் தாங்கிக் கொள்கிற твот. ☾Ya