பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 91 அவன் பார்த்தான் என்று சொல்லுகிறான். "அவர் தானா! நன்கு பார்த்தாயா?” "ஏன் தெரியாது? அவர் படம் தினம் பத்திரிகையில் வந்ததே' என்று அடையாளத்தோடு கூறுகிறான். 'செத்தாலும் இவர்கள் பேயாக உலாவுகிறார்கள். அவர்கள் ஆசை அவர்களை விடவில்லை' என்பது அவன் தெரிவித்த செய்தி. 'மர்ம தேசம் இந்தப் படத்துக்கு இவன் 'கரு' தருவான் போல் இருந்தது இவன் தந்த விவரம். இனிமேல் பொறுக்க முடியாது; மூன்று கதைகளைக் கேட்டு ஆகிவிட்டது. "மெக்கானிக் எப்போது வருவார்?’’ 'இதோ வந்துவிடுவார்; நான் இன்னும் ஒரு செய்தி சொல்ல வேண்டியிருக்கிறது. அதையும் சொல்லி விடுகிறேன்' என்று அனுமதி கேட்டான். ஒரு சின்ன பையன் பக்கத்துக் கடையில் இருந்து டீ வாசனை உடைய ஒரு பருகலைக் கொண்டு வந்து தந் தான்; டிரைவருக்கும் கிடைத்தது. . டீ சாப்பிட்டுக் கொண்டே ‘இருங்கள் மெக்கானிக் வந்து விடுவார்' என்றான். அவன் சொல்கிற கதை; அது செவிச் செல்வம்; இது வாய்ச் செல்வம்; அதாவது வாய் வழியே பருகுவதால் இது வாய்ச் செல்வம். வாய்ச் செல்வமா செவிச் செல்வமா எது பெரிது? 'செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற் றுக்கும் ஈயப்படும்’ என்ற வரிகளைப் படித்த நினைவு. இங்கு வயிற்றுக்கு ஈயப்பட்டது.