பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அடி சறுக்கியது 'நான் சொல்வதில் எந்தத் தப்பும் இருக்காது” என்று அடித்துக் கூறினான். 'இந்த வண்டி, உங்க மெக்கானிக் இருவரும் breakdown ஆகிவிடுவார்கள்; பிரேக் பிடிக்கவில்லை என்று தானே இங்கே வந்திருக்கிறோம்'. "ஆமாம் சார், அதைக் கவனிக்கவில்லை” என்று அவன் ஒப்புக் கொண்டான். 'அடி சறுக்கும்' என்று அழகு தமிழில் அவனுக்கு அறிவிக்கப்பட்டது. எதுக்குமே ஒரு 'பிரேக் டவுன்" ஏற்படுவது இயல்பு. இதைத்தான் 'அடி சறுக்கும்’ என்று அறிவித்தார்கள் நம் பெரியவர்கள் என்றார் இவர். 5 தகுதிகள் நீங்கள் கார் வைத்திருக்கிறீர்களா? பேசாமல் தள்ளி விடுங்கள்; நிம்மதியாக இருக்கலாம். நான் ஒன்று சொல்லுகிறேன். உங்களுக்கு யாராவது ஆகாதவர் இருந்தால் அவருக்கு அதை இனாமாகத் தந்து விடுங்கள். அவர் அதை வைத்துக் கொண்டு அவதிப்படட்டும்; விட்டது தொல்லை. இனமாகக் கொடுத்தால் சந்தேகப்படும் காலம் இது. காரில் 'பாம் வைப்பது இன்று செய்திகள் ஆகிவிட்டன. யாரும வாங்க மாடடாாகள.