பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 95 இது தெரியுமா ஒரு ஆள் தன் கைப் பெட்டியை பஸ் நிலையத்தில் மறந்து பஸ் ஏறிவிட்டார். ஊர் போய்ச் சேர்ந்ததும் நினைவு வந்தது. அடுத்த பஸ் பிடித்துப் பழைய இடத்துக்கே வந்து சேர்ந்தார். வைத்த இடத்திலேயே அது அசங்காமல் இருந்தது; வியப்புதான். வேறு ஒன்றும் இல்லை; அதில் 'பாம் இருக்கும் என்ற பயம்தான். அந்தப் பீதி பலரை யோக்கியர்களாக வைத்திருக்கிறது. விமான நிலையம் முன்பு எல்லாம் உள் நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டால் விசாலமான இடம்; ஏ.சி.; பக்கத்தில் காஃபி, டி.பன் எதுவும் சாப்பிடலாம். அங் கிருந்து 'டாட்டா சொல்லலாம். சவுகரியமாக இருந்தது. இன்று வெளியில் நிற்க வைத்து விடுகிறார்கள். வேதனைதான்; கையசைத்து அனுப்பிவிட்டு நினைவு களில் மட்டும் நின்று வேதனைப் பட வேண்டியதுதான்; அவர்கள் திருமுகத்தைப் பார்க்க வாய்ப்பு மறுக்கப் படு கிறது. கேட்டால் 'பாம்” பீதி என்கிறார்கள். ரயில் பயணம் அதுவும் அப்படித்தான். பெட்டி படுக்கை எல்லாம் தொட்டுப் பார்க்கிறார்கள்; சோதனை கூடத்துக்குப் போனால் அங்கேயும் சந்தேகம்தான். நீ வண்டியை இனாமாகக் கொடுத்தால் அவன் வாங்க மாட்டான் பாதி விலைக்குத் தள்ளிவிடு; அவன் வாங்கிக் கொள்ளுவான். அது விற்பனை உத்தி, பிறகு அவன் அதைத் தள்ளிக் கொண்டு இருப்பான். உன் விவகாரத்துக்கு வரவே மாட்டான் நேரம் இருக்காது. பணமும் கரைந்துவிடும். காரைவிட்டுத் தொலைத்துவிடு நிம்மதியாக இருக்க லாம். சரிவிடமுடியவில்லை. செலவைப்பற்றிக் கவலை இல்லை; அது சில சமயம் அவசியம் ஆகிறது.