பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

நினைக்கிறீர்கள். அது தவறு. எங்கள் மரபு ஒன்றற்கு ஒன்று ஒத்து நிற்பவை.”

“எப்படி?” என்றார் புலவர்.

“சொல்கிறேன்; பாண்டிய மரபு சந்திர குலம் அல்லவா?”

“ஆம்” என்றார் புலவர்.

“முதலியார் வம்சம் என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று பாண்டிய மன்னன் கேட்டான்.

“வேளாளர் குலம்” என்று கூறினார் புலவர்.

“அவர்களுடைய குலத்துக்கு முதல்வர் யார் என்று தெரியுமா?” என்று பாண்டியன் கேட்டான்

“அவர்களைக் கங்கைக் குலத்தினர் என்று சொல்வார்கள்” என்று விடை கூறினார் புலவர்.

“நாங்கள் சந்திரனுடைய வழியில் வந்த வர்கள். அவர்கள் கங்கையின் வழியில் வந்தவர்கள். எங்கள் இருவர் மரபிற்கும் மூலமாக இருப்பவர் பரமேசுவரனே. அவர்கள் சமானமானவர்கள் என்று கருதி அந்தப் பரமேசுவரனே தன்னுடைய சடாபாரத்தில் சந்திரனுக்கும் கங்கைக்கும் இடம் கொடுத்து இருக்கிறான். இறைவனே சந்திரனும் கங்கையும் ஒப்பானவர்கள் என்று தலையாலே தாங்கிக் காட்டும் போது. அந்த இருவர்களுடைய மரபும் சமானமானவை, உறவுடையவை என்று நான் சொல்வது பிழையாகுமா? இதைத் தெரிந்துதான்