பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
29

நான் பாடினேன் என்று பாண்டியன் கூ.றி முடித்த போது, புலவர் வாயடைத்து நின்றார்.


6. தர்மம் தலைகாக்கும்

நாக மங்கலத்தில் நாகப்பன் என்ற சிறந்த கொடைவள்ளல் இருந்தான். தன்னிடம் வருகின்ற இரவலர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அவரவர்களுடைய தகுதிக்கு ஏற்றபடி அவன் பொருள் கொடுத்து உதவுவான். சிலருக்கு ஆடைகளையும் கொடுத்து அனுப்புவான். அவனுடைய கொடையை நாடி, வறியவர்களாகிய சில பெண்மணிகளும் அவனை அணுகுவது உண்டு. அவர்களை மரியாதையுடனும் அன்புடனும் வரவேற்று அவர்களுக்குத் தக்க புடவைகளையும் அணி கலன்களையும் கொடுத்து அனுப்புவான்.

நாகமங்கலத்துக்கு அடுத்த ஊரில் குமரேசன் என்பவன் இருந்தான், அவன் பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பிறருக்குக் கொடுத்துக் கொடுத்துச் சளைத்துப் போன தகப்பனாருக்குப் பிறந்தவன். ஆதலால் அவனை வறுமை வாட்டியது. யாரிடமும் சென்று எதையும் கேட்கும் பழக்கம் இல்லாதவன் அவன்; மானம் பெரிதென்று வாழ்கிறவன். இவற்றை