இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31
களுக்கு எல்லாம் இல்லை என்னாது வாரி வாரி வழங்கியதால் அவனிடம் இருந்த செல்வமெல்லாம் கரைந்து போயிற்று. வேறு ஏதாவது ஊருக்குப் போய் ஏதாவது தொழில் செய்து பிழைக்கலாய் என்று எண்ணி, நாகமங்கலத்துக்கு அருகில் இருந்த சத்தியமங்கலம் என்ற ஊரை அடைத்தான்.
என்ன தொழில் செய்வது என்று அவன் நிச்சயம் செய்து கொள்ளவில்லை. கூலி வேலை செய்வதற்கு அவன் மனம் துணியவில்லை. நாலு வீடுகளில் பிச்சை எடுத்து உண்பதற்கும் அவன் அஞ்சினான். 'மானமே பெரிதென்று வாழ்ந்த