பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67


போர் புரிய வாருங்கள்” என்று ஊக்கத்தோடு கூறி, மேலும் “எனக்கு ஏற்றவன் வீமன்தான்” என்று அறை கூவினான். தன் மந்திரிகளை அழைத்துத் தன் மகனுக்கு முடி சூட்டி விட்டு வீமனுடன் மல்யுத்தம் புரியத் தொடங்கினான்.



அந்த இருவரும் சிங்கமும் சிங்கமும் பொருதாற் போலத் தாக்கினர்; காலாலும் கையாலும், தோளலும், தலையாலும் முட்டி மற்போர் செய்தனர். இவ்வாறு பதினைந்து தினங்கள் பகலும் இரவும் விடாமல் யுத்தம் செய்தார்கள். பூதலம் நடுங்க, திசை எல்லாம் நடுங்க, இருவரும் போர் செய்தனர். பிறகு வீமன் சராசந்தனைக் கிழித்து வெற்றியாரவாரம் செய்து நின்றான்.