பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|v

அந்த ஆண்டில் (1932) வித்துவான் முதல் தேர்வில் அகப்பொருளுக்குரிய வினாத் தாளை அமைத்தவரும் அதற் குரிய விட்ைத் தாள்களைத் திருத்தியவரும் திரு நாட்டார் அவர்கள். அவர்கள் ஒரு விடைத் தாளில் பழனியாண்ட வனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பாடலை ஒருவர் எழுதியிருப்பதைக் கண்டார். அது பழம் பாட்டுப் ப்ோல இருந்தது. எந்தப் புலவரிடமோ பழனிக் கோவை இருக்கிறது, அதை இந்த மாணாக்கர் பாடம் கேட்டிருக் கிறார். அதில் உள்ள பாடலை இவர் எழுதியிருக்கிறார் என்று நாட்டார் எண்ணிக் கொண்டார். - " ;

அவர் ஐயரவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது இவர் தேர்வுக்குப் போன_செய்தி தெரிந்து, ஐயரவர்களிடம் பழனிக் கோவை இருக்குமென்றும், அதைப் பாடம் கேட்ட இவர் அதில் உள்ள் பாடலை விடைத் தாளில் எழுதி ேேவறார் என்றும் எண்ணிக் கொண்டார். அதனால்தான், இவரிடம் அந்தக் கேள்விகளைக் கேட்டார். பாடல் இவர் அப்போதே எழுதியது என்பதைக் கேட்டு அவர் வியப்பு அடைந்தது வியப்பு அல்லவே. - :

இந்தப் புத் தக த் தி ல் இவர் பாடிய பல நூறு பாடல்களுள் சிலேடை நயம் உள்ள பாடல்களை மட்டும் என்னால் தொகுக்க முடிந்த வரையில் தொகுத்து வெளி :யிட்டிருக்கிறேன். -

பல அன்பர்கள் அடுத்தடுத்துச் சொல்லியும் இவற்றைத் தொகுத்து வெளியிட இவர் முன்வரவில்லை. பிறகு நாமே இந்தக் காரியத்தைச் செய்யலாம் என்று துணிந்து உரை .யாடல், கவிதை என்ற இரண்டு வடிவத்திலும் அமைந்த சிலேடைகளைத் தொகுக்க முற்பட்டேன். முற்றும் தொகுக்க முடியாவிட்டாலும் இந்த அளவிலாவது தொகு த் து வெளியிட முடிந்ததே என்று மகிழ்ச்சி அடைகிறேன். - இனிக் கிடைப்பவற்றையும், புதியனவாக இவர் பேசியும் பாடியும் வெளிப்படுத்தி இருக்கும் சில்ேடை களையும் பிறகு தொகுக்கலாம் என்பது என் எண்ணம்.

இறைவன் திருவருள் கூட்டுவிக்க வேண்டும்.

தமிழ்நாட்டு ம க் க ள் இந்தப் புத்தகத்தில் உள்ள சிலேடைகளைப் படித்து நயம் உணர்ந்து இன்புறுவார்கள்

காந்தமலை கி. இராம சுப்பிரமணியன் சேன்னை-28 } இர 亨 ത്തി. :