பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

நடந்தது. இதுதான் முதல் தேர்வில் அகப்பொருள் இலக்கண வினாத்தாளில், இடையூறு கிளத்தல் என்னும் துறையை விளக்கி உதாரணமும் தருக" என்று ஒரு வினா இருந்தது. அந்தத் துறையை நாணிக்கண் புதைத்தல் என்றும் சொல்வார்கள். ஒரு பெண் தன்னை முதல் முதலாகக் க எண் ட தலைவனைக் கண்டு நாணித் தன் கண்ணை மூடிக்கொள்கிறாள். நீ கண்ணை மட்டுந்தானே மூடிக் கொண்டாய் மற்ற அங்கங்கள் என்னை மயக்கு கின்றனவே!" என்று தலைவன் சொல்கிறான். இப்படிச் சொல்வதுதான் அந்தத் துறை. - ‘. . . . . . .

வினாவுக்கு விடையளிக்கும்போது அகப்பொருளிலக் கணத்தில் உதாரணமாகக் காட்டியுள்ள தஞ்சைவாணன் கோவைப் பாடலை எழுதினாலும், உரைநடையில் கருத்தை எழுதினாலும் போதும். இவர் அந்த வினாவுக்குரிய விடை யில் அப்போதே புதிய பாட்டு ஒன்றை எடுத்துக்காட்டாக, எழுதிவிட்டார். பழனியாண்டவனைப் பாட்டுடைத் தலைவ னாக வைத்துப் பாடிய பாட்டு அது. அந்த வேகத்தில் எழுதிய பாட்டை இவரால் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து சொல்ல முடியவில்லை. கருத்தை மட்டும் சொன்னார். 'கண்ணை மூடிக்கொண்டு மார்பைத் தி ற ந் து காட்டு கிறாயே!” என்ற கருத்தை உடையது அந்தப் ப்ாட்டு. கண் ணுக்குக் கடலையும் மார்புக்கு மலையையும் உவமை கூறுவது வழக்கம். 'க ட ைல அடக்கினாயே மலையையும் அடக்கினால் உன்னை அகத்தியன் என்று கும்பிடுவேன்' என்ற பொருளை உடையது அந்தப் பாடல்.

அந்தக் காலத்தில் தமிழ்க் கல்லூரிகள் பல இல்லை, சிதம்பரத்தில் மட்டும் ஒரு தமிழ்க் கல்லூரி இருந்தது. பெரும்பாலும் தனியாகவே மாணவர்கள் படித்துத் தேர்வு எழுதினார்கள். மிகவும் சிலரே வித்துவான் தேர்வை எழுதினார்கள். தேர்வுக்குரிய வினாத்தாளை ஆயத்தம் ப எண் ணு,பு, வு ரு ம் , விடைத்தாளைத் திருத்துபவரும் ஒருவராகவே இருப்ப்ர். .