பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jį į.

நினைத்தால் கவிபாடும் ஆசுகவி இவர். ஈற்றடி கொடுக்கப் பாடிய பாடல்களும், சந்தர்ப்பத்திற்கு ஏற்பச்

சமற்காரமாகப் பாடிய பாடல்களும் பலப் பல.

இவருடைய ஆசிரியப் பிரானாகிய மகாமகோபாத்தி யாய டாக்டர் ஐயரவர்கள் தம்மைப் பார்க்க வருகிறவர் களிடம் இவரை அறிமுகப்படுத்தும்போது, 'இவர் நல்ல ஆசுகவி' என்று சொல்லுவார்கள். இவர் பாடிய செய்யுட் களைச் சொல்லிக் காட்டும்படி பணிப்பார்கள். அக்காலத்தில் இவர் பாடிய கவிகளைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டியவர் :பலர்.

ஒருமுறை ஐயரவர்களைப் பார்க்க வந்த அமரர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் இவர் பாடல்களைக் கேட்டு உருகினார். அப்போது இவர் வித்துவான் தேர்வில் முதல் தேர்வு (Preiminary) எழுதியிருந்தார். நாட்டார் அவர்கள் ஒரு தேர்வாளர். அவர் ஐயரவர்களிடம் பேசிக்கொண் டிருந்தபோது அவர்கள் கி. வா. ஜ. வை ஆசுகவி என்று அறிமுகப்படுத்திச் சில பாடல்களைச் சொல்லச் சொன்னார் கள். இவர் வெறிவிலக்குத்துறைப் பாடல்களையும் சந்தப் பாடல்களையும் சொல்லிக் காட்டினார். 'பந்தமற' என்ற செய்யுளைக் கேட்டு நாட்டார் கண்ணீர் விட்டார்.

நாட்டார் விடைபெற்றுச் சென்றபோது இவர் அவரை வழியனுப்பச் சிறிது தூரம் சென்றார். அப்போது அவர், 'நீங்கள் அகப்பொருளைப் பற்றிய வினாவில் நாணிக் கண் புதைத்தல் துறைக்கு எடுத்துக்காட்டு எழுதினரீர்களா?'. என்று கேட்டார். எழுதியிருக்கிறேன்” என்றார். இவர். 'பழனியாண்டவனைப் பற்றிய பாடலை எடுத்துக் காட்டி யிருந்தீர்கள்ா?” என்று கேட்டார். "ஆமாம்” என்றார் இவர். "அப்படியானால் பழனிக் கோவை ஐயரவர்களிடம் இருக்கிறதா? நீங்கள் பாடம் கேட்டீர்களா?' என்று கேட்டார். அந்தப் பாட்டுப் பழனிக் கோவையில் உள்ளது அன்று நானாக அப்போதே எழுதியது' என்று இவர் சொன்னவுடன் அவர் வியப்படைத்தார்.