பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

se «r

T.I.

இவர் அவ்வப்போது சொன்ன சிலேடைகளைத் தொகுத்துப் புத்தக வடிவில் வெளியிட்டால் பலரும் படித்து மகிழ்வார்கள் என்று எனக்குத் தோன்றியது

இவரிடமே, 'உங்கள் சிலேடைகளையெல்லாம் சேர்த்து நூலாக வெளியிடுங்கள்' என்று பல நண்பர்கள் சொல்வ. துண்டு. பத்திரிகைகளில் வெளியான சி லே ை- த்

துணுக்குகளையெல்லாம் தொகுத்தேன். இவரிடமே கேட்டு இவருக்கு நினைவில் வந்தவற்றை எழுதிக்கொண்டேன். இவருடைய நண்பர்கள் சிலரிடம், இவர் பேசும்போது கூறிய சிலேடைகள் நினைவில் இருக்கின்றனவா?’ என்று: கேட்டுச் சிலவற்றைத் தெரிந்து கொண்டேன். எல்லா வற்றையும் தொகுத்து அமைத்தேன். இந்தப் புத்தகத்தின் முதற் பகுதியில் இவர் வாய்மொழியாகச் சொன்ன சிலேடைகளைக் காணலாம்.

இவர் சொன்ன சிலேடைகள் எல்லாம் இவற்றில் அடங்கிவிட்டன என்று சொல்ல முடியாது. அங்கங்கே உள்ள நண்பர்கள் தாங்கள் கேட்டவற்றை நினைவில் வைத்துக் கொண்டிருக்கக்கூடும். இந்தப் புத்தகத்தைக் காணும் அன்பர்கள் இதில் வராதவற்றை அனுப்பினால் அவற்றை அடுத்த பதிப்பில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பாக இருக்கும். --

இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதியாக, இவர் சிலேடைநயம் அமையும்படி பாடின பாடல்கள் உள்ளன. சிலேடைநயம் அமைந்த பாடல்களும், இருபொருட் சிலேடை களும், வெறிவிலக்குத்துறைப் பாடல்களும், அம்மானைப் பாடல்களும் இந்த இரண்டாம் பகுதியில் உள்ளன. இவற்றில் இவர் நினைவிலிருந்து சொன்னவை சில; இவர் குறித்து வைத்துள்ளவை சில. இவற்றையன்றி அங்கங்கே இவர் பாடியும் எழுதிக் கொடுத்தும் வந்துள்ள பாடல்கள் பல இருக்கும். அவற்றையும் அன்பர்கள் அனுப்பினால் அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடலாம்.