பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் னுரை

என்னுடைய மாமா ரீ கி. வா. ஜகந்நாதன் அவர்கள் தம்முடைய நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப அவ்வப்போது தோன்றும் சில்ேடைகளைச் சொல்வார். அதைக் கேட்டு நண்பர்கள் ரசிப்பார்கள். அவ்வாறு இவர் சொன்ன சிலேடைகள் பலப் பல. சிலவற்றை அங்கங்கே உள்ள சிலர் பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்ப, அவை அவ்வப்போது துணுக்குகளாக வெளி வந்தன; இன்னும் வெளிவருகின்றன. வாயைத் திறந்தால் சிலேடை உதிரும் என்று இவருடைய சிலேடை களைத் .ெ தா. கு த் து இவருடைய அன்பர் மாயூரம் திரு. என். இராமகிருஷ்ணா குமுதத்தில் ஒருமுறை எழுதினார். கலைமகளில் இவரே. ஒரு புலவர் சொன்னார்’ என்று அவ்வப்போது தாம் சொன்ன சிலேடைகளை எழுதி வந்திருக்கிறார். ஆனந்த விகடன், கல்கி, தினமணி கதிர் ஆ கி ய பத்திரிகைகளிலும் இவருடைய சிலேடைகள் வந்திருக்கின்றன. -

இவை முன்கூட்டி யோசனை செய்து சொல்வன அல்ல, அந்த அந்தச் சமயத்தில் தாமே இயல்பாக வந்து அமை, பவை. சிலேடைகள் சொல்வித்தகத்தைச் சேர்ந்தவை. சிறந்த பொருட்சுவை உடைய இலக்கியம் என்று சொல்ல இயலாது. என்றாலும் சுண்டலைப்போலச் சிறிது நேரம் கிளுகிளுப்பை உண்டாக்க இவை உதவும். காவியங்களிலும் பிற பாடல்களிலும் கவிஞர்கள் சிலேடைகளை ஆண்டிருக். கிறார்கள். அவை சொற்சுவையைத் தருபவை.

பழங்காலத்துப் புலவர்கள் சிலேடைநயம் பெறப் பேசுவது வழக்கம். இவருடைய ஆசிரியப் பெருமானாகிய டாக்டர் ஐயரவர்கள் அவ்வாறு பேசுவதுண்டு. அவருடைய மாணாக்கராகிய இவருக்கும் அவ்வாறு பேசுவது கைவந்த கலையாயிற்று. கல்லூரிகளில் உள்ள மாணாக்கர்கள் இவரைச் சிலேடை நயம் பெறப் பேச வேண்டுமென்று வற்புறுத்துவார்கள். -