பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 . - சிலேடைப் பாடல்கள்

இரும்புக்கு : வெட்டி எடுத்தலால் - நிலத்திலிருந்து வெட்டி எடுப்பதனால். மேல் ஆலையில் புகலால்-அப்பால் உருக்குகின்ற இரும்பாலையில் புகுவதனால், ஒட்டு கரும் பொன் துறுபெயரால்-சார்த்திச் சொல்கின்ற கரும்பொன் என்று சேர்ந்த பெயரினால். சுட்டும் அதன் பல் வடிவம் பெய்து-சுட்டிக் காட்டும் அந்த இரும்பினாற் செய்த கம்பி, ஆணி முதலிய பல வடிவப் பொருள்களை இணைத்து. பதிய-அவை பதிவதனால். இல் ஆகுதலால்-வீடு ஆவ தனால். -

நிலத்திலிருந்து வெட்டியெடுத்து ஆலையில் உருக்கிப் பதப்பட்டு, கரும்பொன் என்ற பெயரைப் பெற்று, பல வகையான வடிவமுள்ள பொருளாகி வீடுகட்ட உதவு கிறது இரும்பு என்பது கருத்து.

கரும்புக்கு : வெட்டி எடுத்தலால் - பாத்தியிலிருந்து வெட்டி எடுப்பதனால். மேல் ஆலையில் புகலால்-அப்பால் கரும்பாலையில் சாறு பிழியப் புகுவதனால். ஒட்டு கரும்பு ஒன்றுறு பெயரால்-சேர்ந்த கரும்பு என்று பொருந்திய பெயரினால். சுட்டு மதன்-யாவரும் சுட்டிச் சொல்லும் காமன். பல் வடிவு அம்பு எய்து பதிய-பல வடிவுகளை புடைய மலராகிய அம்புகளை எய்து பதியும்படி செய்ய. வில் ஆகுதலால்-அவனுடைய வில் ஆவதால். -

கரும்பு பாத்தியிலிருந்து வெட்டி ஆலைக்குச் செல் கிறது. கரும்பு என்று பெயர் பெறுகிறது; மன்மதன் தன் பாணங்களை வைத்து எய்வதற்கேற்ற வில் ஆகிறது என்பது கருத்து. -

மண்ணுக்கும் பெண்ணுக்கும் மக்களைத் தாங்குதலால் மாண்போகம் தக்திடலால் தக்கபடி காடுபதி தான்பெறலால்-மிக்ககவின்

ஏரால் வளம்பூெற் றெழுபருவம் சேர்தலால் பாராம்மண் பெண்ணெனவே புார். -