பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 99

மண்ணுக்கு : மக்களைத் தாங்குதலால் - உலகிலுள்ள மக்களைத் தாங்குதலால் (தரை என்ற பெயர் பூமிக்கு உண்டானது, தாங்குவது என்ற காரணத்தால்). மாண் -போகம் தந்திடலால்-சிறந்த பயிர் விளைச்சலைத் தருவ தனால் (பயிர் விளைச்சலை இருபோகம், முப்போகம் என்பது வழக்கம்). தக்கபடி நாடு பதி தான் பெறலால்இடத்துக்கு ஏற்ற வகையில் நாடு என்றும் ஊர் என்றும் பெயர் பெற்ற இடங்களைத் தான் பெற்றிருப்பதால் (வெவ்வேறு நாடுகளும் அந்த நாடுகளில் வெவ்வேறு ஊர்களும் இருக் கின்றன). மிக்க கவின் ஏரால் வளம் பெற்று-மிகுதியாக உள்ள அழகு பெற்ற ஏரினால் உழப் பெற்ற வளத்தை அடைந்து (ஏர்-உழும் கருவி). எழு பருவம் சேர்தலால்பயிர்கள் எழுகின்ற பருவத்தைச் சேர்வதனால் (உழுது பிறகு பருவத்திலே பயிர்கள் எழும்; பருவத்தே பயிர் செய்' என்பது ஒளவை வாக்கு). பார் ஆம் மண்-நிலவுலகத்தில் அமைந்த மண். - -

பெண்ணுக்கு : மக்களைத் தாங்குதலால் - கருவுற்ற போது குழந்தைகளை வயிற்றிலும் பிறந்த பிறகு மடியிலும் மார்பிலும் தோளிலும் தாங்குவதால். மாண் போகம் தந்திடலால்-இல்லறத்தில் மாட்சி பெற்ற இன்பத்தைத் தருவதனால் (அறம் பொருள் இன்பம் வீடு என்ற உறுதிப் பொருளில் ஒன்றாகையால் மாண் போகம் ஆயிற்று). தக்க :படி நாடு பதி தான் பெறலால்-தன்னுடைய அழகு முதலியவற்றுக்கு ஏற்றபடி நாடுகின்ற கணவனைத் தான் அடைதலால். மிக்க கவின் ஏரால் வளம் பெறலால்-மிகுதி கயான அழகும் எழுச்சியும் பெற்று அவற்றால் பெண்மை யென்னும் சிறப்பை அடைதலால் (கவின்-அழகு, ஏர்எழுச்சி). எழு பருவம் சேர்தலால்-பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்ற ஏழு பருவங்களைச் சேர்வதனால். . .3s