பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 சில்ேடைப் பாடல்கள்

கடிகாரத்துக்கும் ரெயில் வண்டிக்கும்

சாவி கொடுத்தலால் காலம் தவறாமல் போவதனால் எண்கள் பொருந்துதலால்-மேவும் மணியடித்தே ஒடுதலால் வாய்ந்தசக்க ரத்தால் அணிகடிகாரம்ரெயிலே ஆம்.

கடிகாரத்துக்கு : சாவி கொ டு த் த லா ல். போ வதனால் - வெளிப்படை. எண்கள்-மணியைக் கு றி க்கு ம் இலக்கங்கள். சக்கரம் - உள்ளே உள்ள சக்கரங்கள்.

ரெயில் வண்டிக்கு : சாவி கொடுத்தலால் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் சாவி கொடுப்பதனால், எண்கள்-வகுப்ப்ைக். குறிக்கும் 1, 1 என்னும் எண்கள். சக்கரம் - கீழே உள்ள சக்கரங்கள். - -

வெண்ணெய்க்கும் கண்ணாம்புக்கும் அடைமேல் தடவி அயிறலால் வெள்ளை புடையநிறம் கொண்டுசட்டி உற்றிடலால் - அடைகின்ற மஞ்சளை வண்ணமாற் றுய்த்துச்செவ் வாயுறலால் அஞ்சுண்ணாம் பும் வெண்ணெய் ஆம்.

. சுண்ணாம்புக்கு அடை மேல் தடவி அயிறலால் - வெற்றிலையின்மேல் தடவி உண்ணுவதால், வெள்ளை உடை. நிறம் கொண்டு - வெள்ளையாகிய தன்னுடைய நிறத்தை, மேற்கொண்டு. சட்டி உற்றிடலால் சுண்ணாம்புச் சட்டியில் இருப்பதால், அடைகின்ற தான் சேருகின்ற. மஞ்சளைம்ஞ்ச்ட் பொடியை. வண்ணம் மாற்று உய்த்து - நிறத்தில் மாற்றத்தைச் செலுத்தி. செவ்வாய் உறலால் - செவ்: வண்ணமாய் அமைவதால். .

வெண்ணெய்க்கு அடைமேல் தடவி அயிறலால் - அடையென்னும் சிற்றுண்டியின் மேலே தடவி உண்ணுவ தால். வெள்ளை உடை நிறம் கொண்டு - வெண்மையாகிய