பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 1 l.

தன் நிறத்தைப் பெற்று. சட்டி உற்றிடலால் - தாழியில் இருப்பதால். அடைகின்ற - அன்பர்கள் புகலடைகின்ற, ம ஞ் சு அளை வண்ணம் மால் - மேகத்தைப் போன்ற

வண்ணத்தையுடைய க ண் ண ன். துய்த்து - உண்டு.

செவ்வாய் உறலால் - அவன் சிவந்த வாயில் சேர்தலால்.

மாலைக்கும் சாலைக்கும் . கானடைகார் வண்டி வருதலால் காணுந்தா

ரானதுமேல் என்னலால் ஆலமது-தானுறலால்

வாகை யிருபுறமும் வாய்த்தலால் மாலையினை ஏகுகின்ற சாலையாய் எண்.

மாலைக்கு கான் அடை - மணத்தை அடைகின்ற. கார்வண்டு இவருதலால்-கரிய வண்டுகள் மொய்ப்பதனால், காணும் தார் ஆனது, மேல் என்னலால் - காண்பதற்கு அழ காகிய தாரானது, இது மேலானது என்று சிறப்பித்தலால். ஆல-அசைய. மது தான் உறலால்-தேன் இருத்தலால், வாகை-அணிந்தவர் தோளை (வாகு-தோள்). இருபுறமும்,

வாய்த்தலால்-இரண்டு பக்கத்திலும் பொருந்துதலால்.

சாலைக்கு : கால் நடை கார் வண்டி வருதலால்-ஆடு மாடுகளாகிய கால்நடைகளும் கார்களும் பிற வண்டிகளும் வருவதனால். காணும் தார் மேல் என்னலால்-இதன் மேல் தார் தோன்றும் என்று சொல்வதனால்(தார்-நிலக்கரித் தார், Tar). ஆலம் அதுதான் உறலால்-அருகில் ஆலமரம் இருப்ப தால். வாகை இருபுறமும் வாய்த்தலால் வாகை மரங்கள் இரண்டு பக்கங்களிலும் பொருந்தி வளர்தலால் (சாலை யோரத்தில் ஆலமரங்களும் வாகை மரங்களும் இருக்கும்.) தேனுக்கும் மீனுக்கும் பூமிசைத்து வண்டு பொருந்துதல் சைவர்கள் தாமிசைந்தே ஆரா தனைத்தகையின்-நீர்மையுறல் ஆமடையிற் சேரல் அவண்துள்ளி ஏய்தல்இவை தாமுறலால் தேன் மீனாச் சாற்று. -