பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 சிலேடைப் பாடல்கள்

தேனுக்கு : பூ மிசைத்து வண்டு பொருந்துதல் - பூவின் மேலே உள்ளதாகிய வண்டு பொருந்துவது. சைவர்கள் தாம் இசைந்தே ஆராதனைத் தகையின் நீர்மையுறல் - சைவர்கள் தாம் மனம் உவந்து பூசை செய்யும் தகுதியாகிய சிறப்பை அடைதல். ஆம் அடையிற் சேரல் - மரத்தின்மேல் ஆகும் தேனடையில் சேர்தல். அவண் துள்ளி ஏய்தல் - அங்கே துளியாகப் பொருந்துதல். - மீனுக்கு : பூமிசை துவண்டு பொருந்துதல் - நிலத்தின் மேல் போட்டால் துவண்டு சேர்தல். சைவர்கள் தாம் மிசைந்தே ஆராது அனைத்தகையின் நீர்மையுறல் - சைவர் கள் உண்டு நிரம்பாது அந்த இயல்பாகிய பண்பை அடை. தல். ஆம் மடையில் சேரல் - வயலுக்குப் பாயும் மடையிலே சேர்தல். அவண் துள்ளி ஏய்தல் - அங்கே துள்ளிப் பொருந்துதல். X

வில்லுக்கும். நெல்லுக்கும்

அம்புவிட முற்றும் வளைந்து களத்துறும் நம்புபெரு வீரத்தை கண்ணுறும்-பம்புகின்ற

வைக்கோலை ஏற்றதனைப் போரில் வயக்கும்.அந்தக் தக்கோர்வில் ೧೪.ಮೇ೧೧ುಣ್ಣrGaು சாற்று.

வில்லுக்கு : அம்பு விட முற்றும் வளைந்து - அம்பு விடும் பொருட்டு முழுவதும் வளைந்து. களத்துறும்-போர்க் களத்தை அடையும். நம்பு பெரு வீரத்தை நண்ணுறும் - விரும்புகின்ற பெரிய வீரத்தைப் பொருந்தும். பம்புகின்ற வை கோலை ஏற்று - பரவுகின்ற கூரிய அம்பைத் தாங்கி. அதனை போரில் வயக்கும் - அதைப் போரிலே எய்து விளங்கச் செய்யும். .

கெல்லுக்கு f அம்பு விட முற்றும் - தண்ணிர் பாய்ச்சுவ தால் முதிர்ச்சியை அடையும். வளைந்து களத்துறும்-கதிர் முற் றி வளைந்து பிறகு களத்துமிேட்டை அடையும். நம்பு