பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் I63:

பெரு ஈரத்தை நண்ணுறும்- விரும்புகின்ற மிக்க ஈரத்தை அடையும். பம்புகின்ற வைக்கோலை ஏற்று - பரப்புகின்ற வைக்கோலைப் பெற்று. அதனை போரில் வயக்கும்-அதைப் போரிலே சேர்ந்து விளங்கச் செய்யும்.

வேலுக்கும் நூலுக்கும்

கூர்மை யுறும்கதிராற்.

கோல முறும்தைக்கும் ஏர்மிகுந்த வெண்மை

இயைந்திருக்கும்-நேர்நிரையாம் பாவூடு சேர்த்துக்

கலைத்தொழிலார் பாங்கிசைப்பார் தாவுசுடர் வேல் நூலாச் சாற்று.

வேலுக்கு : கூர்மை உறும் - கூரிய தன்மையைப் பெறும். கதிரால் கோலம் உறும் - கிரணங்களால் அழகு பெறும் (கதிர்வேல் என்று கூறுவது காண்க). தைக்கும் - பகைவர் மார் பிலே தைக்கும். ஏர்மிகுந்த வெண்மை இயைந். திருக்கும் - அழகு மிக்க வெள்ளை நிறத்தைப் பொருந்தி யிருக்கும். நேர் நிரை ஆம் பாவூடு - நேர் நிரை என்னும் அசைகளாலாகிய கவிதையினுாடு. சேர்த்து - இணைத்து. கலைத் தொழிலார்-கவிதையாகிய கலையை இயற்றும் கவிஞர். பாங்கு இசைப்பார் - அதன் பெருமையைது. சொல்வர்.

நூலுக்கு : கூர்மை உறும் கதிரால் கோலம் உறும்கூர்மை பெற்ற கதிரென்னும் கருவியினால் உருவத்தை அடையும் (பருத்தியை நூலாக்கும்போது கதிர் என்னும் கருவி பயன்படும்). தைக்கும்-துணியைத் தைக்கும். ஏர் இயைந்திருக்கும் நேர்நிரை ஆம் பா ஊடு சேர்த்து-நேராகக் கட்டியுள்ள பா, குறுக்கே வரிசையாக அமையும் ஊடு ஆகிய இரண்டிலும் சேர்த்து. கலைத் தொழிலார்-ஆடையை நெய்யும் தொழிலாளர்கள். பாங்கு இசைப்பார்-பக்கத்தில் இணைப்பார்கள்.