பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 வெறிவிலக்குத்துறைப் பாடல்கள்

மிகஅன்பு கொண்ட திறம்அறி - யாள்தாய், வெறியெடுத்தாள்: தகரங் கழிக்கின் இவள்மேனிப்

பொன்னைத் தகர்ப்பதன்றே. காந்தக் குன்றத் தலைவன் - காந்த மலையிலுள்ள இத் தலைவியின் காதலன். வெறி எடுத்தாள்-வெறியாட்டை எடுக்கச் செய்தாள். தகர் அங்கு அழிக்கின் இவள் மேனிப் போன்னைத் தகர்ப்பது அன்றே - ஆட்டை அங்கே பலியிட். டால் இந்தத் தலைவியின் மேனியில் பிரிவுத் துன்பத்தால் உண்டான பசலையை அது போக்குவது அல்லவே! பொன்பசலை; இது பிரிவினால் உண்டாகும் நிறம். தகரம் கழிக்கின் இவள் மேனிப் பொன்னைத் தகர்ப்பது அன்றேதகரம் என்னும் உலோகத்தைக் கழித்து விட்டால் இவள் மேனியிலுள்ள தங்கத்தை அது போக்குவது ஆகாதே என்று: மற்றொரு பொருள் தொனித்தது.

பாயசம்-மணமங்கலம் காயசம் பந்தத்தைப் போக்கி யருள்குகன்

காந்தமலை - மேயசெம் மற்கு மனங்கொடுத் தாள்தன்

விழைவறியாள்; - தாயென உள்ளவள். வேலனைக் கூவித்

தயையிலளாய்ப் - பாயசம் போக்கின் மணமங் கலம்செய்யும் - பாங்குறுமே. . ." காய சம்பந்தத்தை-உடம்பின் தொடர்பை; பிறவியை. செம்மற்கு-தலைவனிடத்தில். மனம் கொடுத்தாள்-மனத் தைப் பறிகொடுத்த தலைவி. வேலன்-பூசாரி. பாய் அசம் போக்கின் மணமங்கலம் செய்யும் பாங்குறுமே.பாய்கின்ற ஆட்டைப் பலிகொடுத்தால் தலைவிக்கு மணமாகிய மங்கல காரியத்தைச் செய்யும் தன்மை உண்டாகுமோ? இவளுக்குரிய தலைவனோடு இவளை மணம் செய்து