பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 113.

கொடுப்பதுதான் பரிகாரமேயன்றி இந்த ஆட்டைக் கொல் வதால் பயன் இல்லை என்றபடி.

பாயசத்தை இல்லாமல் செய்து விட்டால் மங்கலமான மணம் செய்யும் பாங்கு வருமா என்பது தொனிப் பொருள். பாயசம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது அல்லவா?

ஆட்டும் - பாட்டும் வீட்டுக்கு வம்மெனத் தொண்டரை

ஏற்றும் விமலன்கொங்கு நாட்டுக்குள் மோகையிற் காந்தச்

சிகரியின் நாயகன்சீர் வேட்டுக் குலவாத பாதகர் போல் தாய்

வெறியெடுத்தாள்; ஆட்டுக்கும் ஈங்கிவள் பாட்டுக்கும்

என்னை அமைதொடர்பே. - வீட்டுக்கு வம் என-முத்தியை அடைய வாரும் என்று மோகையில்-மோகனூரில். சிகரி-மலை, ஆட்டுக்கும் ஈங்கு இவள் பாட்டுக்கும் என்னை அமை. தொடர்பே-பலி கொடுக்கும் ஆட்டுக்கும் இங்கே இந்தத் தலைவி ட்டும் துன்பத்திற்கும் அமைந்த தொடர்பு யாது? பாடு-துன்பம்.

இந்த ஆட்டத்துக்கும் இவள் படும் பாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று வேறு ஒரு பொருள் தொனித்தது.

வாய்மை - பொய்ம்மை

காய்மலம் நீக்கிக் கருணையி லாழ்ந்திடக்

காந்தமலை மேய பிரானை வழிபடும் தோன்றலை

வேட்டுகின்றாள் தூய்மையை அன்பை கினைந்தில

ளே அன்னை சூழ்வெறியில்

வாய்மையைக் கொல்ல விரும்பினள்

பொய்ம்மை மனத்தினளே.