பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் lÍ ,

மாடுகளைக் கட்டிப் பிடித்தபடி ஒருவன் சாலையோரத்தில் வந்தான். மாடுகள் எந்தச் சமயத்தில் குறுக்கே வந்து விடுமோ என்று டிரைவரும் பி ற ரு ம் பயந்தார்கள். கார் மெதுவாகப் போயிற்று. அப்போது மாட்டுக்காரன் கயிற்றை விடவே, மாடுகள் வேகமாக எதிர்ப் பக்கத்தில் ஒடி விட்டன. அதுகண்டு காரில் இருந்த அன்பர், 'அப்பாடி கயிற்றை விட்டானே!' என்று ஆறுதல் பெருமூச்சு விட்டார். உங்கள் ஊர்க்காரர்களுக்குக் கயிறு விடக் கற்றுத் தர வேண்டுமா?” என்ற கேள்வியை எழுப்பினார் இவர்.

(கயிறு விடுதல்-பொய் கூறுதல்; கயிற்றை விட்டு விடுதல்.) -

பாயசமும் கொல்லுமோ?

பம்பாயில் பேசப் போயிருந்தபோது ஒரு வீட்டில் உண்ண அழைத்திருந்தார்கள். இவர் போயிருந்தார். அங்கே மிகவும் அருமையாகப் பால் பாயாசம் பண்ணியிருந் தார்கள். ஒரு கரண்டி, இரண்டு கரண்டி விட்டார்கள்: மூன்றாவது கரண்டியும் விட்டு விட்டார்கள். இவருக்குத் திணறியது. மேலும் விட வந்தார்கள். இவரால் பொறுக்க முடியவில்லை, பாய்சன்தான் கொல்லும்; பாயசமும் கொல்லுமோ?’ என்று கேட்டார்; உடனே நிறுத் தி விட்டார்கள்.

(பாய்சன் : poison-விஷம்.)

குமரன் அகத்தியர் ஆனான்

துரத்துக்குடியில் இவர் பேராசிரியர் சிவராம கிருஷ்ணன் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது திருநெல்வேலியிலிருந்து சில அன்பர்கள் இவரைக் காண வந்தார்கள். பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சிவராமகிருஷ்ணனுடைய இரண்டாம் பிள்ளை குமார் எதையோ தின்று கொண்டி