பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

조 2 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

ருந்தான். வந்த அன்பர்களில் ஒருவர், "என்ன தம்பி தின்கிறாய்?' என்று கேட்டார். அதற்கு இவர், "அகத்தியர் ஆகிக் கொண்டிருக்கிறான்” என்றார். என்ன?' என்று கேட்ட அன்பருக்கு விளக்கம் வந்தது: 'அகத்தியர் கடலை உண்டார். இவனும் கடலை உண்கிறான்."

(கடலை-கடலினை, கடலையை.)

முதல் தரம்

ஒரு கூட்டத்தில் இவர் தலைமை தாங்கினார். அந்தச் சபையில் ஓர் அன்பர் பேசினார். அவர் பேசி முடிந்தவுடன் இவர் அவரைப் பார்த்து, 'நீங்கள் இந்தச் சபைக்கு வந்ததுண்டோ?' என்று கேட்டார். இது மூன்றாந் தரம்' என்றார். இவர், ஆனாலும் பேச்சு மட்டும் முதல் தரம்' என்று கூறி அவரைக் கிளுகிளுக்க வைத்தார்.

பருத்தித் துறை

யாழ்ப்பாணத்தில் பருத்தித் துறை என்ற ஊர் ஒன்று - இருக்கிறது. அங்கே ஒரு பள்ளிக் கூடத்தில் இவர் பேசப் போயிருந்தார். கூட்டத்துக்கு வந்திருந்த புலவர் ஒருவர் தாம் இயற்றிய நூல் ஒ ன் ைற இவரிடம் அளித்தார். உடனே இவர், இடத்துக்கு ஏற்ற கொடை இது' என்றார். எ ப் படி?" என்று பு ல வ ர் கேட்க, இது

பருத்தித் துறை அல்லவா? இங்கே நூல் கிடைப்பது பொருத்தந்தானே?' என்றார் இவர்.

தையலும் நூலும் யாழ்ப்பாணத்தில் முன்பு ஈழகேசரி என்ற பத்திரி கையைப் பொன்னையா என்பவர் நடத்தி வந்தார். அவர் தம் அலுவலகத்துக்கு வர வேண்டுமென்று இவரை அழைத்