பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இ.வா.ஜ.வின் சிலேடைகள்

முன்னவர்

ஒரு கூட்டத்துக்கு இவருடைய அன்பர் திரு. ச. கு. கணபதி ஐயர் வந்திருந்தார். கூட்டம் முடிந்தவுடன் சிற்றுண்டி தந்தார்கள். முதலில் இவரிடம் கொடுத்தார்கள். இவர் உடனே, "இதோ முன்னவர் கணபதி, அவருக்குக் கொடுங்கள்" என்றார். அவர், "முன் அவர்; இப்போது இவர்தாம்" என்று இவரைச் சுட்டிக் காட்டினார். 'முன் பின் தெரியாமல் சொல்லிவிட்டேனே!' என்று வருந்துவது போலச் சொல்லிச் சிரிக்க வைத்தார். இவர்.

காலையும் மாலையும்

ஒரூருக்குப் பேசப் போனபோது ரெயில் வண்டியில் சென்று காலையில் இவர் அங்கே இறங்கினார். இவருக்குச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாலையிட்டு வரவேற்றார்கள். இவர், ஏது? காலையிலே மாலை வந்துவிட்டதே!'

என்றார்.' .

பூபாரம்

பேசிவிட்டு வெளியில் வரும்போது இவருக்குப் போட்ட பெரிய பூமாலையை இவருடைய அன்பர் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் தூக்கி வந்தார். அதைத் துாக்கிவரும் போது சிறிதே சிரமப்படுவது போல இருந்தார். ஏன் கஷ்டப்படுகிறீர்கள்? பூ பாரம் தாங்கவில்லையோ?” என்ற கேள்வி இவரிடமிருந்து எழுந்தது. . . . .

  • . . . . . . . . . . - பிரம்படி

ஒரு வீட்டில் பிரம்பு நாற்காலியும் வேறு நாற்காலி

களும் போட்டிருந்தார்கள். இவர் அங்கே போனபோது பிரம்பு நாற்காலியில் உட்காரச் சொன்னார்கள். அதில்