பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 辺7°

'ரசமும் இல்லை; பதமும் இல்லை. எதற்காக அந்தச் '. சாப்பாடு?' - -

நிாலு க்

'தினமணி' அலுவலகத்தில் நவீனன் எழுதிய அண்ணா வின் வரலாறு' என்ற நூலை வெளியிட்டார்கள். அதற்கு மாண்புமிகு கலைஞர் கருணாநிதி தலைமை தாங்கினார். இவரைப் பேசச் சொல்லியிருந்தார்கள். இவர் பேசியதில் ஒரு பகுதி: 'அண்ணா மூன்று க அளித்தார் என்று அவ. ருடைய தம்பிமார்கள் சொல்வார்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றையும் அவர் கட்சிக்கு அளித்தார் என்று பாராட்டுவார்கள். நாலாவது க வையும் வழங்கி யிருக்கிறார். அவர்தாம் கருணாநிதி.' - -

சின்னப்ப தேவர்

கலைவாணர் அரங்கில் கலைஞர் கருணாநிதிக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. சின்னப்பா தேவர் பொன்னாடை போர்த்தினார். வேறு பலரும் பேசினார்கள். கி. வா. ஜ. வும் பேசினார். "சின்னப்பா தேவர் சொல் கிறார்" என்று தொடங்கினார். எல்லோரும் ஆவலாக என்ன சொல்கிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்: தார்கள். 'மிகவும் சின்னப் பா, குறள், அதைப் பாடியவர் திருவள்ளுவ தேவர். அந்தச் சின்னப்பா பாடிய தேவராகிய சின்னப்பா தேவர் கருணாநிதியைப் பற்றிச் சொல்கிறார். கருணாநிதி என்பதற்குச் சரியான தமிழ், அருட் செல்வம். 'அருட் செல்வம் செல்வத்துட் செல்வம் என்று சொல்கிறார். நாம் பெறும் செல்வங்களிலெல்லாம் கருணாநிதிதான் பெரிய செல்வம் என்கிறார்' என்று இவர் விளக்கினார்.

சவுக்கடி காட்டுப்பள்ளியில் ஆசாரிய சுவாமிகள் எழுந்தருளியிருந்: தார்கள். சென்னையிலிருந்து பக்கிங்ஹாம் கால்வாயில்