பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 *. கி.வா.ஜ.வின் சிலேடைகள்

முன்னேற்றம்

அன்பர்கள் ஒரு கூட்டத்துக்கு அழைத்துச் செல்லக் காருடன் வந்திருந்தார்கள். ஒருவர், ஐயா, நீங்கள் முன்னேறுங்கள்' என்று சிலேடையாகச் சொன்னார். இவர் உடனே, "தெரியும். தெரியும், உங்கள் திருட்டுத் தனம்! நான் உங்களுக்குப் புறங்காட்ட வேண்டும் என்பது உங்கள் ஆசை” என்று கூறிச் சிரிக்க வைத்தார்.

கணியும் காயும்

டில்லி மாநகரில் தமிழ் விழா நடைபெற்றது. அதில் கி. வா. ஜ. ஒரு பரிசு பெற்றார். அப்போது இவருடன் சில நண்பர்களும் இருந்தார்கள். தமிழிசை மணி ஆதிசேவுையர் என்னும் சாகித்தியர் கர்த்தா அவர்களில் ஒருவர். அவரும் இவரும் ஓர் அன்பர் வீட்டுக்குப் போனார்கள். அங்கே முற்றத்தில் தேங்காய்த் துண்டுகளைத் தனியாகவும் அதற்கு அருகில் மிளகாய்ப் பழத்தைத் தனியாகவும் உலர்த்தியிருந் தார்கள். ஆதிசேஷையர் தேங்காயை எடுத்து வாயில், போட்டுக் கொண்டார். கண்ட இவர், பழம் இருக்கக் காயைத் தின்கிறீர்களே; கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளின்படி யிருக்கிறீர்களே!' என்றார். -

ரசமும் பதமும்

ஒரு வைணவர் இவரைத் தம் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தார். வைணவர்கள் ரசத்தைச் சாற்றமுது என்று தான் சொல்வார்கள். ஆகவே இவர், 'உங்கள் வீட்டில் ரசம் இல்லாத சாப்பாடல்லவா?' என்றார். 'என்ன அப். படிச் சொல்கிறீர்கள்: சாற்றமுது உண்டே' என்றார்

'சாற்றமுதுதானே? ரசம் இல்லையே?” 'பதத்தானே இல்லை'