பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 23:

சொல்லி இவர் அதிலே உணவு கொண்டார். (ஏடு-பனை யோலை, வாழையிலை.)

அமைச்சரும் நிருபரும்

அமைச்சர் ஒருவர் பேச வந்திருந்தார். அந்தக் கூட்டத்தில், அமைச்சர் வந்ததனால் பல பத்திரிகை நிருபர்கள் வ்ந்திருந்தார்கள். முக்கியமான செய்திகளை அவர் சொல்வார் என்று எண்ணி வந்து உரிய இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அமைச்சர் பேசத் தொடங்குவதற்கு முன், "நிருபர் வந்திருக்கிறாரா?' என்று கேட்டார். கூட்டத்தில் இருந்த இவர், 'அமைச்சருக்குத் தான் அரசரின் மேல் எவ்வளவு அக்கறை?” என்றார். அருகில் இருந்த, நண்பர். அரசரா? இங்கே அரசர் யார்!’ என்று கேட்டார். "ஆமாம், அவர் நிருபர் வந்திருக்கிறாரா என்று கேட்க வில்லையா? நிருபர் என்பது அரசர் அல்லவா?' என்று இவர் விளக்கினார். * .

முகமதியர்

'அந்த ஊரில் கூட்டம் எப்படி இருந்தது?’ என்று இவரை அன்பர் கேட்டார். கோயிலில் கூட்டம். சைவர்கள் ஏராளமாகக் கூடியிருந்தார்கள். முகமதியர்களும் வந்து கேட்டார்கள்' என்றார் இவர்."முகம்மதியர்களா? சிவன் கோயில் அல்லவா?’ என்று வியப்புடன் கேட்டார் அன்பர்.

ஆமாம்; அவர்களுக்குத் தனியிடமே ஒதுக்கி யிருந்தார்கள்.' . .

"ஆச்சரியமாக இருக்கிறதே!”

"ஆச்சரியம் என்ன? முகமதியர் என்றால் யாரென்று நினைத்தீர்கள்? முகமாகிய மதியை உடைய பெண்களை யல்லவா சொல்கிறேன்?' என்று விளக்கினார் இவர்.