பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.芝弘 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

ஆடையும் பாலும் ஒர் அன்பர் வீட்டுக்கு வேறு ஒரு நண்பருடன் இவர் சென்றிருந்தார். அப்போது அங்கே ஒரு குழந்தை நின்று கொண்டிருந்தது. தலைக் கோலம், ஆடைவகை ஆகிய வற்றைக் கண்டு அது ஆணா, பெண்ணா என்று தெரியாமல் இருந்தது. உடன் வந்த நண்பர், 'இந்தக் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரியவில்லையே!' என்றார். உடனே இவர், 'ஆடையை விலக்கினால் பால் தெரியும்' என்றார்.

(பால்-ஆண்பால், பெண்பால்.) -

பாலும் ஆட்ையும் திருக்காட்டுப் பள்ளியை அடுத்த ரங்கநாதபுரத்தில் ஒரு திருமணம், அதில் பேசச் சென்றிருந்தார். இவர். பேசும் போது இடையிடையே தொண்டை வற்றாமல் இருக்கப் பால் தந்தார்கள். பேச்சு முடிந்தவுடன் கல்யாணப் பெண்ணின் தந்தை இவருக்கு ஆடை பரிசளித்தார். இவர், 'முன்பு பால் கிடைத்தது: இப்போது ஆடை கிடைக்கிறது’ என்றார்.

உள்ளத்தை

இவர் பேசுகையில் சொன்னது : - அந்தப் பெண் தன்னுடைய அன்பை எடுத்துச் சொன்னாள். காதலனுக்கும் தனக்கும் உள்ள ஒட்டுறவைச் சொன்னாள். அவள் தந்தை அவள் அந்த இளைஞனைக் காதலிப்ப்தை அறிந்து அவளை மிரட்டிக் கேட்டார்; * உள்ளத்தைச்சொல்; என்ன நடந்தது?" என்றார். என் உள்ளத்தைத் தான் சொல்கிறேன். உள்ளத்தைத்தான் சொல்கிறேன்; இல்லாததைச் சொல்லவில்லை' என்றாள்.

மேனாவோடு இவர் தேவ கோட்டையில் சேக்கிழார் திருநாளில், பேசப் போயிருந்தார். அமரர் தமிழ் வள்ளல் மெய்யப்பச்