பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 25

செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார். அவரை மேனா என்று சொல்வார்கள். செட்டியார் திருவாடானையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். 'நான் அந்தத் துவத்தைப் பார்த்ததில்லை' என்று இவர் சொல்ல, இன்றே போய் வரலாம்' என்று தம் காரில் அழைத்துக்கொண்டு அந்தத் தலத்துக்குப் போய் வந்தார் செட்டியார். இவர் தாம் திருவாடானை போய் வந்ததை ஒர் அன்பரிடம் சொன்னார். * எப்படிப் போய் வந்தீர்கள்?' என்று அவர் கேட்டார். ஜோம் ஜாமென்று மேனாவுடன் போய் வந்தேன். மடாதி உதிதான் மேனாவோடு போக வேண்டுமா?’ என்றார் இவர். {மேனா-பல்லக்கு வகை, மெய்யப்பச் செட்டியார்.)

கையைப் பிடியுங்கள் இவர் சொல்லும் கதைகளில் ஒன்று:

ஒரு வீட்டில் ஒருவர் விருந்துண்ணப் போனார். ஒரு பெண்மணி பரிமாறினாள். ரசம் பரிமாறிய போது அவர் சாதத்தைக் குழித்துக் கொண்டார். அவருக்கு ரசத்தில் பிரியம் இருப்பதை அறிந்து, பரிமாறிய பெண்மணி கையைப் பிடியுங்கள்" என்றாள். அவர் உடனே அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துவிட்டார் 1 -

வரிா, வரா

மிகவும் ஆவலுடன் ஒரு பெண்மணியை எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் இவரும் இருந்தார். அப்போது தூரத்தில் அந்தப் பெண் மணி வருவதையறிந்த அவள் குழந்தை மகிழ்ச்சி தாங்காமல், வரா வரா' என்று கூவினாள். இவர், ஏன் வரா வரா என்று கத்துகிறாய்?' என்று சிரித்தபடியே கேட்டார்.

கண்ணைக் கட்ட

'இவளுக்குக் கண்ணைச் சோதனை செய்து கண்ணாடி போட வேண்டும். டாக்டரிடம் போக வேண்டும்' என்று

சி-2