பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

அழைத்தாலும் வருகிறேன்” என்றார். இவர் நன்றியுரை கூறினார். அப்போது சொன்னது : ஆண்டவனுடைய புகழைப் பரப்பும் உத்தியோகத்தைச் செய்யும்படி பகவான் இந்தப் பெரியவர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறான். இன்ன தேதி, இன்ன ஊர் என்ற வரையறையில்லை. எல்லாத் தேதியும் எல்லா ஊரும் அவன் புகழ் பாடும் உரிமை இந்தத் தேதியூர்ச் சாஸ்திரிகளுக்கு உண்டு. இவர் தம்மைக் காலி என்று சொல்லிக் கொண்டார்; காலி என்றால் பசு. இது மந்தைவெளி, பசுக்கள் உள்ள கோகுலம். கண்ணன் பஜனை செய்வதால் அவன் இருக்கும் கோகுலம் இது, ஆகையால் இந்தக் காலி அடிக்கடி வரலாம்.'

கோடி விடு

வெளியூர் ஒன்றில் பேசப் போயிருந்தார், இவரைப் பார்க்க வந்த நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தார். அவர் புதியதாக அறிமுகமானவர். ஆகையால் அவரைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். அவருடைய வேலை, குடும்பம் முதலியவற்றைப் பற்றி விசாரித்தார். "வீடு கட்டிக் கொண்டிருக்கிறீர்களா?' என்று கேட்டார். ஏதோ ஒரு சிறிய வீடு கட்டியிருக்கிறேன். நீங்கள் வந்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும்” என்றார். உங்கள் வீடு எங்கே இருக் .கிறது?’ என்று இவர் கேட்டார். இந் த த் தெருவின் கோடியில் இருக்கிறது' என்றார் நண்பர். அப்படியா! ஒரு வீடு என்று சொன்னீர்களே! கோடி வீடு என்று சொல்லுங்கள்' என்று இவர் சொன்னதைக் கேட்ட அவருக்கு வாயெல்லாம் பல்லாயிற்று.

நடுத்தெரு

எழுத்தாளர் ஒருவர் மயிலாப்பூரில் உள்ள நடுத்தெரு என்ற பெயருள்ள் தெருவில் குடியிருந்தார். அவ்ர் பிறகு ஒரு வீடு கட்டிக்கொண்டு போனார். தாம் வீடு கட்டிக்