பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

காரர் உள்ளே என்ன இருக்கிறதென்று தேடினார். ஒரே ஒரு மலைப் பழம் இருந்தது. அதையும் சர்க்கரையையும் ஒரு தட்டில் கொண்டு வந்து வைத்து, 'தங்களுக்குக் கொடுக்க ஒன்றும் இல்லை. இதை எ டு த் து க் கொள்ளுங்கள்' என்றார். இவர் கூறியது: 'அ ேட ய ப் பா! இது போதாதா? ஒரு பழமானாலும் மலைப் பழம் அல்லவா?”

ைப ய ன்

திருமணம் ஒன்றை விசாரிக்க இவர் போயிருந்நார். விசாரித்து விட்டு அன்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். புறப்படும்போது தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு இவற்றோடு ஒரு பட்சணப் பொட்டலமும் கல்யாண வீட்டுக் காரர். இவரிடம் தர வந்தார். எல்லாவற்றையும் கையில் எடுத்துச் செல்வது சங்கடமாக இருக்குமென்று எண்ணி ஒரு பையில் அவற்றை யெல்லாம் போட்டுக் கொடுத்தார். "பெரியவர்களுக்கு எல்லாவற்றையும் கையில் கொண்டு போவது சிரமமாக இருக்கும் அல்லவா? இப்போது எளிதில் கொண்டு போகலாம். பை உங்களிடமே இருக்கட்டும்' என்று சொல்லிக் கொடுத்தார். வாங்கிக் கொண்ட இவர், "ஆம், நான், பெரியவனாகத்தான் வந்தேன்; இப்போது பையனாகப் போகிறேன்' என்றார். -

நொடியில்

அன்பர் ஒருவருடன் ஒர் ஊருக்கு இவர் போனார். ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து இரண்டு மைல் வண்டியில் போக வேண்டும். ஒரு குதிரை வண்டியில் போக ஏற்பாடு செய்தார்கள். குதிரை வேகமாகப் போகுமா?' என்று இவர் கேட்டார். நொடியில் கொண்டுபோய் விடுகிறேன்" என்றான் வண்டிக்காரன். வண்டியில் ஏறிப் போனார்கள். வழிநெடுகக் குண்டும் குழியும்ாக இருந்தது. என்னப்பா இது? ரோடு மோசமாக இருக்கிறதே!' என்று உடன் வந்த