பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கி.வா.ஜ.வின் சிலேடைகள்

தெரியுமா? எனக்குப் போய் டாக்டர் பட்டத்தைக் கொடுத். திருக்கிறார்கள்” என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். அருகில் இருந்த இவர், நீங்கள் பெரிய பண்டிதர் அல்லவா?" என்று கேட்டார். (பண்டிதர் - வைத்தியர், புலவர்.)

சருவமுமா?

ஒர் ஊரில் இவருக்கு அன்பர் ஒரு சருவத்தில் வெந்நீர் வைத்துக் கொடுத்து நீராடச் சொன்னார். வெந்நீர்ப் பாத்திரத்தை இறக்கி வைத்து, 'குளியுங்கள்' என்றார் அன்பர்; இந்த வெந்நீர் முழுவதும் உங்களுக்கே’’ என்றார்.

சருவமும் எனக்கா?' என்று இவர் கேட்டவுடன் அன்பருக்கு நயம் புலப்படவில்லை. ஒரு நிமிஷம் கழித்து. "சருவத்தை வைத்துவிடுங்கள்' என்றார் அன்பர்.

(சருவம்-எல்லாம், சிறிய தவலை.)

வழுக்கை

ஒரு நாள் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது இவர், 'தென்ன மரத்துக்கும் ம னி த னு க் கு ம் நேர் விரோதம்' என்றார், எப்படி?’ என்று ஒருவர் கேட்டார். 'தென்ன மரத்தில் தேங்காயில் இளமையில் வழுக்கை. இருக்கிறது. மனிதனுக்கு முதுமையில்தான் வழுக்கை வருகிறது' என்று அதை எடுத்துக் காட்டினார்.

(வழுக்கை-இளந்தேங்காய், த ைல யி ல் வி ழு ம்.

பலவின்பழம்

ஓர் அன்பர் இவரைப் பேச அழைத்திருந்தார். பிற்: பகலில் நல்ல பழங்கள் இருந்தால் உண்ணலாம்' என்று. இவர் சொன்னார். அப்போது அங்கே வேறு பழங்கள் கிடைக்கவில்லை. பலாச்சுளை மட்டும் கிடைத்தது. அதை,