பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் 3.5

இன்னும பெருக்க வேண்டும்?

இ வ. ர் திருவேட் டீசுவரன்பேட்டையில் குடியிருந்த் போது இவர் வீட்டில் விசாலம் என்ற வேலைக்காரி இருந் தாள். அவள் கொஞ்சம் பருமனாக இருந்தாள். "உனக்குச் சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள்' என்று இவர் பரிகாசம் செய்வார். ஒரு நாள் ஒர் அன்பருடன் இவர் சுவாரசியமாகக் கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்தைப் பெருக்குவதற்காக வி ச | ல ம் நின்றுகொண்டிருந்தாள். பேச்சுச் சுவாரசியத்தில் இவர் அதைக் கவனிக்கவில்லை. என்ன இது? விசாலம் பெருக்க வேண்டும். நீங்கள் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்களே!' என்று இவர் மனைவி சொன்னாள். இவர், விசாலம் இன்னுமா பெருக்க வேண்டும்?' என்பதைக் கேட்டு அந்த விசாலமே பக்கென்று சிரித்துவிட்டாள்.

t

அடடா!

எதிர்பாராத விதமாக வேறு ஊரில் இருந்த அந்த அன்பர் வீட்டுக்கு இவர் போனார். அவர் மிகவும் மகிழ்ச்சி யால் துள்ளிக் குதித்து, "அடடா! எப்போது வந்தது? பார்த்துப் பல காலம் ஆயிற்றே" என்றார். அதனால்தான் மரியாதை இல்லாமல் வரவேற்கிறீர்களோ?' என்று இவர் கூறக் கேட்டு அ ன் பர் விழித்தார். 'அட போட்டுப் பேசுகிறீர்களே! நியாயமா?' என்றபோதுதான் சிலேடை புரிந்தது. -

டாக்டர்

மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாத ஐயரவர் - களுக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள். ஒரு நாள் ஐயரவர்கள் அதைப்பற்றிப் பேசும்போது, "எனக்கு வைத்தியம் தெரியுமா? மருந்து